Kidny

Kidny

சிறிய பாடசாலை , பெரிய சாதனைகள். பாராட்டு விழா நடத்துகிறது வெலிபிடிய ஸாஹிரா மகா வித்தியாலயம்.

 பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா 

தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் வெலிகாமம் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள வெலிபிடிய எனும் ஊரில் அமைந்ததே மாத்தறை/ஸாஹிரா மகா வித்தியாலயமாகும்.

இக்கல்லூரியானது கடந்த பல வருடங்களாக க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறின் அடிப்படையில் தென்மாகாணத்திலே முதலிடம் பெற்றுள்ளது குறிப்பித்தக்கது.

இதன் அடிப்படையில்கடந்த வருடம் அதாவது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சா/த பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று தென்மாகாண தமிழ்மொழி மூலமான பாடசாலைகளில் முதலிடத்தை தன்னகத்தே சுவீகரித்துக் கொண்டுள்ளது.

எனவே இவ்வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாணவ செல்வங்களையும், அதற்காக அரும் பாடுபட்ட ஆசான்களையும் பாராட்டவென பாடசாலையின் SDC பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,  நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய பரிசளிப்பு மற்றும்  பாராட்டு விழா இன் ஷா அல்லாஹ் எதிர்வரும் 2017.05.21 'ம் திகதி மாலை 4:00 மணி முதல் வெலிபிடிய மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இவ்விழாவில் தென்மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஷந்திம ராசபுத்ர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

சிறிய பாடசாலை , பெரிய சாதனைகள். பாராட்டு விழா நடத்துகிறது வெலிபிடிய ஸாஹிரா மகா வித்தியாலயம். சிறிய பாடசாலை , பெரிய சாதனைகள்.  பாராட்டு விழா நடத்துகிறது வெலிபிடிய  ஸாஹிரா மகா வித்தியாலயம். Reviewed by Madawala News on 5/20/2017 10:23:00 PM Rating: 5