Ad Space avaiable

மாத்தளை சாஹிராக் கல்லூரி ZCM 91(batch 91) பூரண அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கான கருத்தரங்கும் செயலமர்வும்..

மாத்தளை வலய கல்விப் பணிப்பாளர் திரு.Y.M.மகிந்த.எஸ்.யாப்பா அவர்களினால் வடிவமைக்கப்பட்ட கடந்த வருடம் 2016 இல் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றி கண்ட ACS program (Accelerated counseling for success) செயற்றிட்டத்தை இவ்வருடமும் நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது அறிமுகக் கருத்தரங்கும் செயலமர்வும் 2017.05.09 அன்று மு.ப.8.30 தொடக்கம் பி.ப.2.30 வரை மாத்தளை சாஹிராக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாத்தளை வலய தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்கள் 600 பேர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வின் வரவேற்புரையை மாத்தளை சாஹிராக் கல்லூரி அதிபர்.அல்ஹாஜ்.J.M. இக்பால் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இவ்வருடம்  2017 இல் கல்விப் பொதுத் தராதரம் சாதாரண தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களின் பரீட்சை பெறுபேற்றை மேம்படுத்தும் இச்செயற்றிட்டத்தின் அறிமுக விளக்கவுரையை இச்செயற்றிட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்திய மாத்தளை வலய கல்விப் பணிப்பாளர் திரு.மகிந்த.எஸ்.யாப்பா அவர்கள் நிகழ்த்தினார்கள்.  க.பொ.த.(உ.த) வகுப்பிற்கு தகுதி பெற தவறக் கூடியவர்கள் என கருதும் மாணவர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட இச்செயற்றிட்டம் கடந்த வருடம் நடைமுறைப்பட்ட விதமும் இவ்வருடம் சுமார் 200 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் விதத்தையும் பற்றிய பூரண விளக்கமளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாத்தளை வலய முஸ்லிம் பாடசாலைகளுக்கான இணைப்பாளரும் ஆலோசனையும் வழிகாட்டலுக்குமான பொறுப்பாளருமான அல்ஹாஜ் M.R.U.ரில்வான் அவர்களால் "வளமான எதிர்காலத்திற்கு குறிக்கோளை வரையறுப்போம் " என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நடைபெற்றது.கற்றலில் இடர்படும் மாணவர்களுக்கான சிறந்ததோர்  விளக்கத்தையும் வழிகாட்டலையும் , மனதை ஒரு நிலைப்படுத்தும் செயற்பாட்டுடன் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் மாத்தளை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.M.N.சப்ரா அவர்களும் திருவாளர்.தங்கராஜா அவர்களும் ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

2015இல் க.பொ.த(ச.த) பரீட்சை பெறுபேற்றில் அகில இலங்கை ரீதியில் 28ஆவது இடத்தில் இருந்த மாத்தளை கல்வி வலயம் 2016 இல் 15ஆவது இடத்திற்கு முன்னேறுவதற்கு ACS program (Accelerated counseling for success) காரணமாக இருந்தது எனலாம்.

இச்செயற்றிட்டத்தையும் இதை வடிவமைத்து செயற்படுத்திய மாத்தளை வலய கல்வி பணிப்பாளர் திரு.மகிந்த. எஸ்.யாப்பா அவர்களையும் அதிகாரிகளையும் மத்திய மாகாண கல்வி அமைச்சு பாராட்டி கௌரவித்தது.
இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய மாத்தளை சாஹிராக் கல்லூரி ZCM 91(BATCH 91) இற்கும் வழிகாட்டியாக இருந்த இணைப்பாளர் அல்ஹாஜ் M.R.U.ரில்வான் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
தகவல் :A.L.M.SADIKEEN (TR)

மாத்தளை சாஹிராக் கல்லூரி ZCM 91(batch 91) பூரண அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கான கருத்தரங்கும் செயலமர்வும்.. மாத்தளை சாஹிராக் கல்லூரி ZCM 91(batch 91) பூரண அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கான கருத்தரங்கும் செயலமர்வும்.. Reviewed by Madawala News on 5/11/2017 01:14:00 AM Rating: 5