tg travels

விமானத்தில் கைதான இலங்கையருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபடும் நிலை.


தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி, விமானத்தில் ரகளை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் உளவள பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, இன்று அவரை வைத்தியப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய விக்டோரியா பிராந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மெல்போர்னில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் சென்ற பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டதாக மலேஷிய போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் அப்துல் அசீஸ் பின் கப்ராவி குறிப்பிட்டார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபரிடம் விக்டோரியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, அவர் 25 வயதான இலங்கைப் பிரஜை எனவும், அவுஸ்திரேலியாவில் செப் பயிற்சிகளில் (Chef Training) ஈடுபட்டு வந்தவர் எனவும் தகவல் வௌியாகியுள்ளது.

சந்தேகநபர் இன்று மெல்போன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிக பட்சம் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபடும் எனவும் தெரியவந்துள்ளது.
விமானத்தில் ரகளை செய்த இலங்கையருக்கு 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!
விமானத்தில் கைதான இலங்கையருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபடும் நிலை. விமானத்தில் கைதான இலங்கையருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபடும் நிலை. Reviewed by Madawala News on 6/01/2017 04:01:00 PM Rating: 5