tg travels

கண்டி மாவட்டத்தில் சீரற்ற கால நிலையால் 136 குடும்பங்களை சேர்ந்த 525 பேர் பாதிப்பு. பெண் ஒருவர் உயிரிழப்பு- 61 பேர் தற்காலிக முகாமில்.



(மொஹொமட ஆஸிக்)

கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக  136 குடும்பங்களை சேர்ந்த 525  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாகவும்  கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அனர்த்த முகாமத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பனிப்பாளர்  இந்திக்க ரணவீர கருத்து தெரிவிக்கையில் மாாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையாக அனைத்து உதவிகளையும் வழங்க மாவட்ட செயலகம் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

கண்டி மாவட்டத்தில் அமைநதுள்ள 16 பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் அனர்த்த முகாமத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அதன் படி, யட்டிநுவர  பிரதேச செயலக பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த, 27 பேரும்,, பூஜாபிட்டியவில், 3  குடும்பங்களை சேர்ந்த 9 பேரும், உடபலாத்தையில், 2 குடும்பங்களை சேர்ந்த 11 பேரும், பன்விலையில் , ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், பாத்தஹேவாஹெட்ட, 3 குட்ம்பங்களை சேர்ந்த 12 பேர்,  பாத்ததும்பரையில் , 8 குடும்ப்களை சேரந்த  28 பேரும், கங்கஇஹல போரலயாவில் , 3 குடும்பங்களை சேர்ந்த 17 பேரும், அக்குறணையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த  ஐவரும் ,  பஸ்பாகே  கோரலயாவில், 32 குடும்பங்களை சேர்ந்த 134  பேரும், மினிபபேயில் , 62 குடும்பங்களை சேர்ந்த 224  பேரும் , தொழுவையில்  ஒரு குடும்பத்தை  சேர்ந்த 4 பேரும் , உடுநுவரையில் , 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேரும், ஹாரிஸ்பத்துவையில்  இரு குடும்பங்களை சேர்ந்த 7 பேரும் , மெததும்பரையில் 4 குடும்பங்களை சேர்ந்த 14 பேரும், ஹத்தரலியத்தவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், உடதும்பறையில் இரு குடும்பங்களை சேர்ந்த 11  பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அனர்த்த முகாமத்துவ நிலையம் மேலும்  தெரிவிக்கின்றது. 

அதே வேலை பஸ்பாகே கோரலய பிரதேச செயலக பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பன இடத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 61  பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்  அந் நிலையம் தெரிவிக்கின்றது.

கண்டி மாவட்டத்தில் சீரற்ற கால நிலையால் 136 குடும்பங்களை சேர்ந்த 525 பேர் பாதிப்பு. பெண் ஒருவர் உயிரிழப்பு- 61 பேர் தற்காலிக முகாமில். கண்டி மாவட்டத்தில் சீரற்ற கால  நிலையால்  136 குடும்பங்களை சேர்ந்த 525 பேர் பாதிப்பு. பெண் ஒருவர் உயிரிழப்பு- 61 பேர் தற்காலிக முகாமில். Reviewed by Madawala News on 6/06/2017 10:54:00 AM Rating: 5