tg travels

20 வருட  உழைப்பு  ஒரு தீக்குச்சியினால் கருகிப்போன சோகம் !


நேற்று மஹியங்கனையில் தீக்கிரையான ரிச் ஷூ பெலஸ் எனும் பாதனி விற்பனை நிலையத்தில் 6 மில்லியன் பொருமதியான பொருட்கள் இருந்ததாக அந்த கடை உரிமையாளர் பொலிஸ் நிலைத்திற்கு நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டம் புதிய காத்தாங்குடி கர்பலா வீதியை சேர்ந்த அலிகார் தாஜுதீன் என்பவருக்கு சொந்தமான குறித்த கடை மஹியங்கனையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சுமார் எட்டுமுப்பது மணியளவில் கடையை மூடிய பின்னர் பின்னால் உள்ள நுழைவாயிலினால் கடைக்குள் சென்றுள்ள கடை உரிமையாளர் வரவு செலவு கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்த போது கடைக்கு வெளியே கதவு அருகே நெருப்பு பிடிப்பதை அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் பின்வழியால் வெளியேறி நெருப்பை அணைக்க அவர் உட்பட அங்கிருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை.

அரைமணி நேரத்திற்குள் அங்கிருந்த கேஸ் சிலிண்டர் ஒன்றை தவிர மற்றைய அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது.அதனை தொடர்ந்து மஹியங்கனை பொலிஸில் அலிகார் தாஜுதீன் நடந்தார்கள் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் பொலிஸார் வழமை போன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உடல் நலம் சிறிது பாதிக்கப்பட்டுள்ள கடை உரிமையாளர் இன்று நன்பகல் காத்தாங்குடிக்கு சென்றுள்ளார்.

60 க்கும் மேல் பொருமதியான வியாபாரத்தை வைத்திருந்தவர் வெறும் ஆயிரம் ரூபா மாத்திரமே அவரது சட்டைப்பையில் எஞ்சி இருந்த நிலையில் மஹியங்கனையில் உள்ள எமது சகோதர்கள் அவசர உதவியாக 50 ஆயிரம் திரட்டி கொடுத்துள்ளனர்.

நேற்று தீக்கிரையான வர்த்தக நிலையத்திற்கு காப்புறுதி எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



20 வருட  உழைப்பு  ஒரு தீக்குச்சியினால் கருகிப்போன சோகம் ! 20 வருட  உழைப்பு  ஒரு தீக்குச்சியினால் கருகிப்போன சோகம் ! Reviewed by Madawala News on 6/10/2017 11:03:00 PM Rating: 5