tg travels

2 கிலோ தங்கத்துடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த விமானப்படை வீரர் சிக்கினார்.



10 மில்லியன்  ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வௌியில் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் விமானப்படை வீரர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் விமான நிலையத்தில் கடமையாற்றும் வீரர் என, விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

வௌிநாட்டிலிருந்து வந்த நபருடன் சந்தேகப்படும் விதத்தில் குறித்த வீரர் நடந்துகொள்வதை சீ.சீ.டிவி கமராவில், சுங்க அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அதனையடுத்து, சந்தேகநபரை சோதனையிட்டு கைதுசெய்துள்ளனர்.

தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான விமானப்படை வீரரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ​அளவு 2 கிலோகிராம் என, விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 கிலோ தங்கத்துடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த விமானப்படை வீரர் சிக்கினார். 2 கிலோ தங்கத்துடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த விமானப்படை வீரர் சிக்கினார். Reviewed by Madawala News on 6/13/2017 10:29:00 AM Rating: 5