Ad Space avaiable

இதுவரை 300 க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இடத்தில் நீராடுவதை தவிர்க்கவும். #கண்டிப் பிரதேசத்தில்.


(மொஹொமட்  ஆஸிக்)

மஹாவலி கங்கையின் மிகவும் ஆழமான  இடமாக கருதப்படும் பேராதளை கன்னோருவ வீதிதன்ன பிரதேசத்தில் 300 க்கும்  மேற்பட்டவர்கள் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதால் இவ் விடத்தில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாரு  பொலீஸார்   அப் பிரதேசத்திற்குவரும் உள் நாட்டுச் சுற்றுலா பயனிகளை கேட்டுக் கொள்கின்றனர்.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் கண்டிக்கு சுற்றுலாவரும் உள் நாட்டு சுற்றுலா பயனிகள் நீராடுவதற்கு இவ் விடத்தை தேர்தெடுப்பது வழக்கமாக உள்ளதாக கூறும்  பொலீஸார் இவ் விடத்தின் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல்  கங்கையில் குதித்து நீரில் மூழ்கி உயிரிழப்பதாகவும் பொலீஸார்  தெரிவித்தனர்.

இவ் விடத்தில்  இது வரை 300 க்கும் மேற்பட்டவர்கள் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

  மஹாவலி கங்கையின் இவ் விடத்தின் ஆபத்தை சுற்றிக் காட்டும் அறிவித்தல் பலகைகள்  பொருத்தப்பட்டுருந்த  போதும் அவைகளை  பொருற்படுத்தாது சுற்றுலா  பயனிகள் கங்கையில் பாய்ந்து  நீராட முனைவதினால் பாரிய உயிர் ஆபத்துகள்  வருவதாகவும்  பொலீஸார் தெரிவித்தனர்.

கடந்த  காலங்களில் இவ் விடத்தில் பாடசாலை மாணவர்கள் அரச ஊழியர்கள் வியாபாரிகள்  தனியார் துறை  ஊழியர்கள் உற்பட 300 க்கும் மேற்படட்வர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களுல் பெரும்பாளானோர் மது  அறிந்திய பின் நீராடச் சென்றதாலேயே நீரில் மூழ்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்,


இவ் விடம் பயங்கரமான முறையில் மனிதர்கள் நீரில் மூழ்கும்மிகவும் ஆபத்தான இடமாக இனம் கானப்பட்டுள்ளதால்  இவ் விடத்தில் நீராடுவதை தடுத்துக் கொள்ளுமாரும் மது அருந்திய பின் நீரில் இறங்குவதையும் தடுத்துக் கொள்ளுமாரும் பொலீஸார் மேலும் கேட்டுக் கொள்கின்றனர்.
இதுவரை 300 க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இடத்தில் நீராடுவதை தவிர்க்கவும். #கண்டிப் பிரதேசத்தில். இதுவரை 300 க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இடத்தில் நீராடுவதை தவிர்க்கவும். #கண்டிப் பிரதேசத்தில். Reviewed by Madawala News on 6/19/2017 09:44:00 AM Rating: 5