tg travels

சொந்த ஊர்களில் நோன்பு பெருநாளை கொண்டாட சிரியா வந்த 42,000 மக்கள். #சந்தோஷ தருணம்.


சிரியாவில் போர் நிறுத்த வலயங்கள் (Deescalation zone) அறிவிக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஒரு மாதகாலமாக பல பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இதனால் துருக்கியில் வாழும் சிரியா அகதிகள் பல வருடங்களுக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்களில் நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்காக துருக்கியில் இருந்து படையெடுத்தவண்ணமிருக்கிறார்கள். 
இதுவரை 42,000 மக்கள் சிரியாவை வந்தடைந்திருக்கிறார்கள். இந்த வாரமும் பல ஆயிரம் பேர் சிரியாவுக்கு சொல்வதற்கு தயாராகி வருகிறார்கள். 

வெளியூர்களில் எத்தனைதான் இருந்தாலும் சொந்த ஊர் மண் வாசனையுடன் கொண்டாடுவதே திருப்தியான பெருநாள் என்கிறார் சிரியாவை வந்தடைந்த ஒரு அலெப்போவாசி. இவர் சொல்வது 100% உண்மை. 

யா அல்லாஹ்!! இவர்களின் முகத்தில் தெரியும் இந்த சந்தோசத்தை  நிலைபடுத்தி, இவர்களின் கஷ்டங்களை இலகுபடுத்தி வைப்பாயாக!!

- தில்ஷான் முகம்மத்-



 
 
சொந்த ஊர்களில் நோன்பு பெருநாளை கொண்டாட சிரியா வந்த 42,000 மக்கள். #சந்தோஷ தருணம். சொந்த ஊர்களில் நோன்பு பெருநாளை கொண்டாட சிரியா வந்த 42,000 மக்கள். #சந்தோஷ தருணம். Reviewed by Madawala News on 6/16/2017 09:03:00 PM Rating: 5