tg travels

எதிர்வரும் இரு போட்டிகளில் உபுல் தரங்கவும் இல்லை... அணிக்கு 60% தண்டம் வேறு.


இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் உபுல் தரங்கவிற்கு இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பியன் கிண்ணத் தொடரில் தென் ஆபிரிக்க அணியுடன் நேற்று (03) இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டதன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட் சபையினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது தவிர இலங்கை அணி வீரர்களுக்கு நேற்றைய போட்டிக்கான சம்பளத்தில் 60% இனை தண்டப்பணமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காயம் காரணமாக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் குறித்த போட்டியில் விளையாடத நிலையில், அணியின் தலைவராக செயற்பட்ட தரங்கவிற்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் இலங்கை அணி மோதவுள்ள இந்தியா (ஜூன் 08) மற்றும் பாகிஸ்தானுடனான (ஜூன் 12) இரு போட்டிகளிலும், விளையாடும் வாய்ப்பை உபுல் தரங்க இழந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைக்களுக்கு அமைய, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 50 ஓவர்கள பந்து வீசுவதற்கு 3 1/2 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய போட்டியில் இலங்கை அணி 4 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வியடைந்த போதிலும், அணியின் சார்பில் உபுல் தரங்கவே அதிகூடிய ஓட்டமான 57 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் இரு போட்டிகளில் உபுல் தரங்கவும் இல்லை... அணிக்கு 60% தண்டம் வேறு. எதிர்வரும் இரு போட்டிகளில்  உபுல் தரங்கவும் இல்லை... அணிக்கு 60% தண்டம்  வேறு. Reviewed by Madawala News on 6/04/2017 01:52:00 PM Rating: 5