Kidny

Kidny

மத்திய மாகாணத்தில் வீடற்றவர்களுக்கு 6000 வீடுகள் நிர்மானிக்க ஏற்பாடு.


(மொஹொமட்  ஆஸிக்)

மத்திய மாகாணத்தில்  வீடற்ற 6000  குடும்பங்களுக்கு புதிதாக  வீடுகளை  அமைப்பதற்கு  ஒரு  புதிய திட்டம்  நேற்று அ றிமுகப்படுத்தப்பட்டது.

கண்டி பொல்கொல்லயில்  அமைந்துள்ள கூட்டுறவு  அபிவிருத்தி நிலையத்தில்  இடம் பெற்ற  நிகழ்வு ஒன்றில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்  ஏக்கநாயக்க மற்றும்  மாகாண  வீடமைப்புத்  துறை  அமைச்சர்  எதிரிவீர  வீரவர்தன  ஆகியோர்  கலந்து கொண்டு இத் திட்டத்தை  ஆரம்பித்து வைத்தனர்.

இத் திட்டத்தின் கீழ்  மாகாணத்தில் வீடற்றவர்கள்   அளைவருக்கும்  ஒரு  வீட்டை  வழங்குவது  திட்டமாக கொண்டுள்ளதுடன்  இதற்து  மாகாணத்தில்  வசிக்கும்  வசதி படைத்தவர்களின்  உதவியை  பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு  வசதி  படைத்தவர்களின்  உதவியுடன்    இவ்வீடுகள்  நிர்மானிக்கப்பட உள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இங்கு  கருத்து தெரிவித்த மத்திய மாகாண முதலமைச்சர் சரத்  ஏக்கநாயக்க,  வீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது என்றும்  சிலர்் ஆடம்பரமான வீடுகளை கட்டிக் கொண்டுள்ளதுடன் மற்றும் சிலர்  வீடில்லாத நிலைக்கு தல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மானித்து கொடுப்பது எங்களது  கடமையாகும் என்றும்  அவர்   இங்கு தெரிவித்தார்.

மத்திய மாகாண அமைச்சர்  எதிரிவீர வீரவர்தன கருத்து தெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் வீடற்ற  அனைவருக்கும் வீடொன்றை பெற்றுக் கொடுப்பதை நோக்கமாக கொண்டு இத் திட்டம்  அமுல் படுத்தப்படுவதாகவும், மாகாண சபைக்கு  போதுமான  அளவு  பணம் இல்லாததன் காரணமாக தனவந்தர்களின் உதவியை பெறறுக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும்  அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

மத்திய மாகாண வீடமைப்புத்துறை ஆலுனர் திருமதி  யமுனா தயாரத்ன உற்பட பலரும் இங்கு  உரையாற்றினர்.

2017 06 27  ஆஸிக்

மத்திய மாகாணத்தில் வீடற்றவர்களுக்கு 6000 வீடுகள் நிர்மானிக்க ஏற்பாடு. மத்திய மாகாணத்தில் வீடற்றவர்களுக்கு  6000 வீடுகள்  நிர்மானிக்க  ஏற்பாடு. Reviewed by Madawala News on 6/28/2017 08:49:00 AM Rating: 5