tg travels

மல்லிகைத்தீவு சிறுமிகள் பாலியல் துண்புறுத்தலில் கைதான 6 பேரும் சரீரப் பிணையில் விடுதலை.


ஏ.எஸ்.எம்.தாணீஸ்: எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை மாவட்ட மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மல்லிகைத்தீவு பெருவெளி தமிழ் கலவன் பாடசாலையில்
கல்வி கற்கும் 03 சிறுமிகள்  பாலியல் துண்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 06 சந்தேக நபர்களும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று 12 திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது தலா  50 ஆயிரம் ரூபா வீதம் ,06 பேரும் சரீரப் பிணையில் செல்லுமாறும்,மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை மூதூர் பொலிஸ் நிலையத்தில் 06 பேரும் கையொப்பமிடுமாறும், மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.ஏ.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை இவ்வழக்கினை விசேட புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு நீதிவான் மூதூர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதோடு தொடர்ந்து இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மல்லிகைத்தீவு சிறுமிகள் பாலியல் துண்புறுத்தலில் கைதான 6 பேரும் சரீரப் பிணையில் விடுதலை. மல்லிகைத்தீவு சிறுமிகள்  பாலியல் துண்புறுத்தலில் கைதான 6 பேரும் சரீரப் பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on 6/12/2017 02:05:00 PM Rating: 5