tg travels

பாதசாரி கடவையில், கனரக வாகனம் மோதி 7 வயது சிறுமி ஸ்தலத்திலேயே பலி. ஆத்திரமுற்ற பொதுமக்கள் வாகனத்தை எரித்தனர்.


நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் பாதசாரி கடவையில் பாதை கடக்க முற்பட்ட, 7 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே பலியானார்.

ஆத்திரமுற்ற பொதுமக்கள் கனரக வாகனத்துக்கு தீ வைத்துள்ளதுடன் பிரதேசத்தில் சிறு பதட்ட  நிலையும் ஏற்பட்டுள்ளது.

 நானுஓயா ரயில் மேம்பாலத்திற்கருகில்   உள்ள  பாதசாரி கடவையிலே இன்று காலை 8 மணியளவில் இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது

நுவரெலியாவிலிருந்து-ஹட்டன் நோக்கி வந்த கனரக வாகனமே  இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணை நானுஓயா பொலிஸார் மேற்கொள்கின்றனர்
பாதசாரி கடவையில், கனரக வாகனம் மோதி 7 வயது சிறுமி ஸ்தலத்திலேயே பலி. ஆத்திரமுற்ற பொதுமக்கள் வாகனத்தை எரித்தனர். பாதசாரி கடவையில், கனரக வாகனம் மோதி 7 வயது சிறுமி ஸ்தலத்திலேயே பலி. ஆத்திரமுற்ற பொதுமக்கள் வாகனத்தை எரித்தனர். Reviewed by Madawala News on 6/15/2017 10:09:00 AM Rating: 5