Ad Space avaiable

நிவாரண வேலைக்காக சென்ற எங்களோடு இணைந்துகொண்ட 'அபுல்' .



ஓர்நாள் உறவுக்காரன். நேர்த்தியாக உடுத்து ஒழுங்காக இருப்பான்.
மாத்தறை அக்குரஸ்ஸ போர்வ பிரதேசத்தை சேர்ந்தவன். வயது தெரியாது இருந்தும் தோற்றத்தில் ஓர் வாலிபனாக இருந்தான். முதலில் அவன் பெயர் எங்களுக்கு தெரியாத காரணத்தால் அபுல் என்றே அழைத்தோம்.

நிவாரண வேலைக்காக சென்ற எங்களோடு அன்று காலையில் ஒட்டிக்கொண்டவன் அந்தநாள் மஹ்ரிப் வரைக்கும் எங்களோடே சுற்றித்திரிந்தான். நாங்கள் நிவாரணப்பொருட்களை பங்கிடசென்ற இடமெல்லாம் எங்களோடு சேர்ந்து அவனும் வேலை செய்தான்.

தண்ணீர் போத்தல்களை சுமந்துசெல்வதற்கு கேட்பான், சிலநேரம் வேண்டாம் நீ வேலை செய்யாதே என்போம், சிலநேரம் நாம் அவனை வேறுபடுத்தியதுபோல் ஆகிவிடும் என்று அவனையும் சுமந்துசெல்ல அனுமதித்தோம்.

"ஆ... ஊ..." என்று எங்கள் வேலையை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தான். எங்களைவிட எங்கள் வேலையில் மும்முரமாக அவன் இருந்ததைப்பார்த்து எங்களுக்கே ஆச்சரியம். பெரும்பாலும் யாரும் உதவாத நேரங்களில்கூட முழுதாக எங்கள் நிவாரணவேலைகளில் அவனும் பங்கெடுத்தது மனதுக்கு ஆனந்தம்.

எல்லோரும் அவனை மனநிலை குன்றியவனாகவே பார்த்தார்கள், ஆனால் எங்களுக்கு அவ்வாறு பார்த்தவர்களே மனநிலை குன்றியவர்களாக தோன்றினார்கள். அவனை "மனநிலை குன்றியவன்" என்று கூறிய மக்களின் வீடுகளைத்தட்டி அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தான்.

இறுதியாக எங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுக்கவேண்டும் என்று அவனுடைய கையில் இருந்த கையடக்கத்தொலைபேசி (பழைய கல்குலேட்டர்) மூலம் எங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தான்.

நிஸ்ரின் போன்றவர்களை எல்லோரும் நக்கல் நையாண்டி செய்வதும், துன்புறுத்துவதுமே செயலாக கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப்போன்றவர்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் சொர்க்கத்திற்கு செல்ல அல்லாஹ்விடம் மன்றாடவேண்டும், ஆனால் அவர்கள் சொர்க்கத்திற்கு என்றே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் எம்மைவிட உயர்ந்தவர்கள்.

அவனை மறக்ககூடாது என்பதற்காகவும், உலகில் யாரும் தேவையில்லாமல் படைக்கப்படவில்லை என்பதற்காகவும், நிஸ்ரின் போன்றவர்கள் கூட சிலநேரத்தில் சமூகத்திற்கு உதவக்கூடியவர்கள்தான் என்பதை கூறவும் இந்தப்பதிவு இடப்படுகிறது.

Royal Youths - Sri Lanka



நிவாரண வேலைக்காக சென்ற எங்களோடு இணைந்துகொண்ட 'அபுல்' . நிவாரண வேலைக்காக சென்ற எங்களோடு இணைந்துகொண்ட 'அபுல்' . Reviewed by Madawala News on 6/04/2017 10:35:00 AM Rating: 5