Ad Space avaiable

செய்திகளுக்கு மத்திய வங்கி மறுப்பு தெரிவித்தது. இலங்கையில் எந்த வங்கியிலும் கட்டார் ரியாலை மாற்றலாம்.


மறு அறிவித்தல் வரை விமான நிலையம் மற்றும்  அரச,  தனியார் வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்றிக் கொடுக்க வேண்டாம் என மத்திய  வங்கி  அறிவிப்பு செய்திருந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை சற்றுமுன்னர் மத்திய  வங்கி மறுத்துள்ளது.

இதனை அடுத்து கட்டுநாயக்க  விமான நிலையத்தில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்ற முடியும் என விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள எந்த வங்கியிலும் வழமை போன்று  கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்ற முடியும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை வழமை போன்று கட்டாருக்கு விமான சேவை தொடரும் என ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

( முன்னதாக daily mirror ஊடக செய்தியின் படி மறு அறிவித்தல் வரை விமான நிலையம் மற்றும்  அரச,  தனியார் வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்றிக் கொடுக்க வேண்டாம் என மத்திய  வங்கி  அறிவிப்பு செய்திருந்த செய்தி  பிரசுரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளுக்கு மத்திய வங்கி மறுப்பு தெரிவித்தது. இலங்கையில் எந்த வங்கியிலும் கட்டார் ரியாலை மாற்றலாம். செய்திகளுக்கு மத்திய வங்கி மறுப்பு தெரிவித்தது. இலங்கையில் எந்த வங்கியிலும் கட்டார் ரியாலை மாற்றலாம். Reviewed by Madawala News on 6/06/2017 10:41:00 AM Rating: 5