Ad Space avaiable

மனிதர்களை தாக்கி கொன்று அட்டகாசம் செய்யும் யானை விரட்டியடிப்பு.


விசில் அடிக்கும் காட்டுயானை ஒன்று, பிரதேசவாசிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடுமையான முயற்சியினால், காட்டுக்கே விரட்டிவிடப்பட்ட சம்பவமொன்று, கெக்கிராவ மரதன்கடவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மனிதர்களை தாக்கி கொல்லும் அந்த யானையானது, மரதன்கடவல பிரதேசத்தில் திரிவதாக கிடைத்த தகவலையடுத்து, வீதியில் சென்றுகொண்டிருந்த நபரொருவர், அந்த யானைக்கு பின்னாலே சென்று, யானைக்கு சுருக்கு கயிறொன்றை வீசியெறிந்து சிக்கவைத்துள்ளார்.

அந்த யானையையே, விசில் அடிக்கும் யானையென்று பிரதேசவாசிகள் அழைக்கப்படுகின்றது. இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாகிப் பிரயோகத்தில், அந்த யானையின் தும்பிக்கையில் துளையொன்று ஏற்பட்டுள்ளது. ஆகையால், யானை மூச்சையிழுத்து வெளியிடும்போது, விசில் அடிப்பதை போல சத்தமொன்று கேட்கும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இந்த யானை, முச்சக்கரவண்டியில் பாண் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை கடந்த 19ஆம் திகதியன்று தாக்கியதில், அவருடைய கால் முறிந்துள்ளது. அந்த முச்சக்கரவண்டியும் சுக்குநூறாக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதேயானை தாக்கியதிலேயே கெக்கிராவையை சேர்ந்த நிமல் சமரதுங்க என்பவர் பலியாகியுள்ளார்.
மனிதர்களை தாக்கி கொன்று அட்டகாசம் செய்யும் யானை விரட்டியடிப்பு. மனிதர்களை தாக்கி கொன்று அட்டகாசம் செய்யும் யானை விரட்டியடிப்பு. Reviewed by Madawala News on 6/29/2017 09:33:00 AM Rating: 5