Kidny

Kidny

(படங்கள்) இன்று இலங்கையின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளின் தொகுப்பு.

இன்று கொழும்பு  கோல்பேஸ்,  கல்குடா , சாய்ந்தமருது, ஓட்டமாவடி, கல்முனை ,  மெனிக்கின்ன, மருதமுனை, யாழ்ப்பாணம், கிண்ணியா,  செம்மணோடை, பரகஹதெனிய, மருதானை. ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை.

கல்குடா :


கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இன்று (26) திங்கட்கிழடை காலை 6:30க்கு மீராவோடையில் அமைந்துள்ள அரிசி ஆலை வளாகத்தில் இடம்பெற்றது.

நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் பெருநாள் தொழுகையை நாடாத்தியதோடு சிறப்புரையையும் வழங்கினார்.

சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், சிறுவர்களும் கலந்து கொண்டதுடன் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, செம்மன்னோடை, காவத்தமுனை போன்ற பகுதிகளிலும் இருந்து பலரும் நபி வழியில் தொழுவதற்காக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
எம்.ஐ.அஸ்பாக்


சாய்ந்தமருது திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை :-எம்.வை.அமீர் -

புனித நோன்புப் பெருநாள் தொழுகைகள் நாடுமுழுவதும் இடம்பெற்றவரும் 2017-06-26 தினத்தில் இவ்ஆண்டும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருந்த பெருநாள் தொழுகை சாய்ந்தமருது கடற்கரை திறந்த மைதானத்தில் அஷ்செய்க் கலீலுர் றஹ்மான் (ஸலபி) தலைமையில் இடம்பெற்றது.

குறித்த பெருநாள் தொழுகைக்கு பெரும்திரளான பெண்கள் உட்பட பலரும் கலந்துகொண்ட அதேவேளை பெருநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி தேசிய பாடசாலை 

- அனா. -

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை ஜமாதே இஸ்லாமியின் ஓட்டமாவடி கிளை ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று (26.06.2017) காலை இடம் பெற்றது.


பெருநாள் தொழுகையையும் கொத்பா பேருரையையும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி நடாத்தியதுடன் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, மாவடிச்சேனை, செம்மண்ஓடை, பிறைந்துரைச்சேனை போன்ற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை ஹுதா திடலில்


கல்முனை ஹுதா திடலில் நடைபெற்ற நோன்புப்பெருநாள்(26) தொழுகை நடை பெறுபதை படத்தில்  காணலாம்                          
( கல்முனையூர் அப்றாஸ்)

மெனிக்கின்ன பொலிஸ் மைதானத்தில் 
*சத்தியத்தின்ர் வளர்ச்சிக்கு  ஓர் எடுத்துக் காட்டு*


(26-06-17) இன்றைய தினம் மெனிக்கின்ன பொலிஸ் மைதானத்தின் நடைபெற்ற, புனித நோன்புப் பெருநாள் தொழுகையானது சத்தியத்தின் வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

மெனிக்கின்னையை அண்மித்த ஊர்களான மடவளை மற்றும், கும்புக்கந்துர பகுதிகளில் சத்தியத்தின் வளர்ச்சியை தடுக்க வரலாறு நெடுகிலும் பல்முனை பிரயத்தனங்கள் மேற் கொள்ளப் பட்டன.

எனினும்! இறைவனின் கிருபையால் சத்தியத்தின் ஜோதி மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகி்ன்றது என்பதற்கு இன்றைய பெருநாள் தொழுகையில் குழுமியிருந்த மக்கள் கூட்டமும் ஓர் ஆதாரமாகும்.

*ஊர் வழமை நிர்வாகிகளே*

ஊர் வழமையை காத்து மாண்புமிகு உத்தம நபியின் வழிமுறையை அலட்சியம் செய்யும் நிர்வாகிகளே! உங்களால் விடுக்கப் பட்ட எச்சரிக்கைகள் பலமிழந்து விட்டன. உங்களால் முன்னெடுக்கப் பட்ட அடக்குமுறை அடங்கி விட்டன. உங்கள் நாவுகள் உச்சரித்த போலி ஒற்றுமைக் கோஷம் பொய்ப் படுத்தப் பட்டு விட்டன. ஆனால் இன்னும் வாழ்நாள் எஞ்சியுள்ளது. விழித்துக் கொள்ளுங்கள். சத்தியத்தை தடுக்க முயலும் மடமைக்காவல்ல. சத்தியத்தின் காவலர்களாக உங்களையும் மாற்றிக் கொள்வதற்காக. புறப்படுங்கள் ஊர் வழமையெனும் வழிகேட்டை விட்டும், நபிவழமை எனும் சத்திய ஜோதியை நோக்கி.

*இன்றைய உங்கள் நிலமை உணறுங்கள்*

கடந்த காலத்து உங்கள் நிலமையையும், சம காலத்து உங்கள் நிலமையையும் நிதானமாக கண்முன் கொண்டு வந்து பாருங்கள். தனியொரு மனிதன் தன் வீட்டினுள்ளும் சத்தியத்தை கடை பிடிக்க முடியாதளவு கெடு பிடிகளை செய்தீர்கள் அன்று. ஆனால் இன்று!... உங்கள் மஸ்ஜிதினுள் வந்து நபி வழியை கடைப் பிடிப்பதைக்கூட தடுக்க முடியாது தடுமாறி நிற்கிறீர். அல்லாஹ்வின் ஜோதியின் வளர்ச்சியை எவராலும் அனைக்க முடியாது என்பதற்கு இது போதுமான சான்றாகும்.

*எனதூர் மடவளையே*

அன்பார்ந்த ஆன்றோரே, சன்மார்க்கத்தின் சான்றோரே, புத்தி ஜீவிகளே, இளைஞர் சமூகமே ஊர் வழமையிலிருந்து வெளியேறி நபிவழமை பக்கம் உங்கள் ஈமானை திருப்புங்கள். இதுவே எம் அனைவரதும் இம்மை மறுமைக்கும், எம் ஊருக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஊர் வழமை, ஊர் கட்டுப்பாடு எனும் சித்தாந்தங்கள் சில காலங்களுக்கு சாதனை போன்று தோற்றமளித்தாலும், ஈற்றில் ஓங்கப் போவது நபிகளாரின் சித்தாந்தமே.

தேசிய ரீதியாக ஒரு பார்வை பாருங்கள். சத்தியத்தை அடக்க நினைத்த இடங்களில் எல்லாம் அசத்தியத்தின் கோட்டை இடிந்து சுக்கு நூறாகியிருபபதை உணர்வீர்கள்.

உணர்ந்து கொள்ளுங்கள். உயர்வு பெறுவீர்கள். அன்றேல்! நம்மூரிலும் பிளவுகள் ஏற்படின்! *உத்தம நபியின் உன்னத வாழ்க்கை முறையை முதுகுக்குப்பின் தூக்கியெறிந்து விட்டு ஊர் வழமையை கடை பிடித்த நீங்களே பிளவுக்குக் காரண கர்த்தாக்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்*.

"இறைவா சத்தியத்தை ஏற்று ஒரே கொடியின் கீழ் பயணிக்கும் மக்களாக எனதூர் மக்களை ஆக்கி வைப்பாயாக"

மடவளையிலிருந்து :- அபூ ஸுமையா

புனித நோன்புப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

புனித நோன்புப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று(26-06-2017)காலை 6.15 மணிக்கு நடைபெற்றது.இங்கு கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார் இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.


ஈதுல் பித்ர்' எனும் நோன்புப்பெருநாள்  பெருநாள் தொழுகை யாழில் இரு வேறு இடங்களில்  இன்று(26)  சிறப்பாக நடைபெற்றது.


யாழ்ப்பாணம்


- பாருக் சிஹான் -

யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில்  யாழ் கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சகையினரும் இணைந்து ஏற்பாடு செய்த     முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.இதேவேளை வழமை போன்று பெண்களுக்கான தொழுகையும் அதே இடத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி உள்ளக வளாகத்தில் நடைபெற்றது.

அத்துடன் யாழ்ப்பாணம் பூங்காவிற்கு முன்னால் இருக்கும் யாழ் மாநகர மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி)  தலைமையில் நடைபெற்றது.


கிண்ணியா


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியாவில் இன்று (26) பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற நபி வழி நோன்பு பெருநாள் திடல் தொழுகையின் படங்களைக் காணலாம். கிண்ணியா மத்திய கல்லூரி மைதானம்,கிண்ணியா அல்அக்ஸா ,அல் இர்பான் மைதானம் போன்ற பல்வேறு திடல்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மணோடை


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையின் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை - 2017

செம்மணோடை கொமனி ஹாஜியாரின் மர ஆலைக்கு அருகாமையில் உள்ள திடலில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

 செம்மண்னோடை  அல்-ஹம்றா


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை  இன்று 26 காலை 6.30 மணியளவில் செம்மண்னோடை  அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையினையும்,குத்பா பேருரையினையும் ஜமாஆத்தின் பொது தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமி நடாத்தினார்.

பெருநாள் தொழுகையில்  கல்குடா பிரதேசத்தின் பல்வேறு முஸ்லிம் கிராமங்களிலும்மிருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும், சிறார்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கான இனிப்பு பண்டங்கள் அடங்கிய பெருநாள் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறிந்த ஜமாஆத்தின் ஏற்பாட்டில் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக நபி வழியின் அடிப்படையில் பெருநாள் தொழுகையினை (திறந்த வெளியில்) திடலில் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பரகஹதெனிய

இக்பால் அலி
பரகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத்  ஏற்பாட்டில்  நோன்புப் பெருநாள் தொழுகை  இடம்பெற்றது. பெருநாள் தொழுகை மொளவி ஷைபுல்லாவும் .பிரதான  குத்பாப் பேருரையை  உண்மை உதயம் சஞ்சிகையின் ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல் நடத்தி வைப்பதையும் கலந்து கொண்டவர்களையும் இங்கு படங்களில் காணலாம்.

கொழும்பு காலிமுகத்திடலில்


(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு காலிமுகத்திடலில் மேமன் சங்கத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்று வரும் பெருநாள் தொழுகை  இன்றும் (26)திகதி - காலை 08.00 மணிக்கு  நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இத் தொழுகையை அல்-ஹாஜ் ஹாபீஸ் ஈஹிசான் காதிரி நடா்த்தி வைத்தாா்

மருதானை


ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஆத்தின் கொழும்பு கிளையினரின்  பெருநாள் தொழுகை இன்று (26) மருதானை ஆனாந்தாக் கல்லுாாிக்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதாணத்தில் ஜாமாஆத்தின் தலைவா் எம்.எம். ரஸ்மின் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
(படங்கள்) இன்று இலங்கையின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளின் தொகுப்பு. (படங்கள்) இன்று இலங்கையின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளின் தொகுப்பு. Reviewed by Madawala News on 6/26/2017 12:43:00 PM Rating: 5