Yahya

தற்போதைய ஆட்சியை இனவாதத்தின் மூலம் வீழ்த்துவதற்கு ஒரு குழு சூழ்ச்சி செய்கிறது. வெகு விரைவாக சட்டம் வரும்.


-ஜே.எம்.ஹபீஸ்-

வர்த்தக முயற்சிகளில் கூடுதல் ஈடுபாடு காட்டுவது போல் கல்வியிலும் அதி கூடிய ஈடுபாடு காட்டுவதற்கு நம் சமூகம் முன் வருவதன் மூலம் நாடும் சமூகமும் சிறப்படையும் என்று முஸ்லிம் சமய விவகார தபால் துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.(3.6.2017)

கண்டி பதியுதின் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக்க கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வைபவத்தில் முத்தாலிப் அபிவிருத்தி அமைப்பின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் 40 பேருக்கு மூன்று வருடங்களுக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது. அவ்வைபவத்தில் அமைச்சர் அப்துல் ஹலீம் மேலும் தெரிவித்ததாவது-

இலங்கையைப் பொருத்தவரை முஸ்லிம்கள் வியாபாரச் சமூகம் என்ற தோற்றப்பாட்டடையே ஏற்படுத்தி வருகின்றனர். இது மாற்றப்படும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் அமைய வேண்டும்.  இலங்கை முஸ்லிம்கள் ஒரு கல்விச் சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டால் அனேக பிரச்சினைகளுக்கு தீர்வாகி விடும். கல்வியில் பின் நிற்பதே இன்றைய அநேக பிரச்சினைகளுக்கு முதற்படியாக அமைந்துள்ளது.

இவ்வாறு புலமைப்பரிசில்களை வழங்குவதன் ஊடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் இனநல்லுறவை வளர்க்க முத்தாலிப் அபிவிருத்தி அமைப்பு பங்காற்றுகிறது எனலாம்.ஏனெனில் இன மத வேறுபாடு இன்றி புலமைப்பரிசில் வழங்கப்பட்டதைக் காண முடிந்தது.

கல்வி மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாக எமது திட்டங்கள் அயை வேண்டும். கல்வி அபிவிருத்திக்கு முதன்மை வழங்காத எந்த ஒரு சமூக நலத்திட்டமும் பயன் அற்றது.

எமது முன்னோர்களில் ஒருவரான அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஒரு அரச அதிபராக கடமையாற்றியவர். ஆனால் கொழும்பு சாகிரா கல்லூரியில் அதிபர் வெற்றிடம் ஒன்று ஏற்பட்ட போது அதனை ஈடுசெய்ய சிவில் சேவை அதிகாரியான தனது பதவியையே துறந்து அதிபர் பொறுப்பை ஏற்றார்.

இது கல்வியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக நோக்காகும்.
இன்று கல்வியின் அவசியம் பற்றி பேசப்படும் காலமாகும். கல்விப் பொருளாதாரமே இன்று பேசு பொருளாக உள்ளது. இன்று அரசைப் பொருத்தவரை கல்வித் தொழிற்பாடுகள் இரண்டு மட்டங்களில் மேற்கொள்ளப் படுகிறது.

ஒன்று தேசிய மட்டத்திலும் மற்றது மாகாண மட்டத்திலும் நடக்கிறது. தேசிய பாடசாலைகளுக்கு தேசிய மட்டத்திலே நிதிகள் வருகின்றன. எனவே நேரடியாக மத்திய அரசின் நிதி மூலம் எமது அனேக பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் வெறுமனே பௌதீக வளத்தினால் மட்டும் கல்வி அபிவிருத்தி அடையாது. புhடசாலைச் சமூகமும் ஏனைய அமைப்புக்களும் கல்வியில் காட்டும் கரிசனையை விட அதிகமாக மாணவர்களும் தமது கல்வியில் கவனமெடுத்தல் வேண்டும். வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் என்ற நிலை மாற்றப்பட்டு கல்வியை அடிப்படையாகக் கொண்ட ஒருசமூகம் என்ற நிலைக்கு மாறுவதற்குத் தேவையான தயார் நிலையை உருவாக்க வேண்டும்.

இன்று பௌத்த மக்களுக்கும்  முஸ்லிம் மக்களும் இடையே ஒரு பிரச்சினை இருப்பதாக நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை ஆராய்ந்து பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு குழு திட்டமிட்டு இதனைச் செய்வதை புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரசியல் ரிதியாக மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வாக இதனைக் கருதலாம். அதாவது தற்போதைய ஆட்சியை இனவாதத்தின் மூலம் வீழ்த்துவதற்கு ஒரு குழு சூழ்ச்சி செய்வதாக கூறலாம். அத்துடன் முஸ்லிம்கள் மீது சிலருக்கள்ள போட்டி பொறாமை, காழ்புணர்ச்சி போன்ற அம்சங்களாகும்.

மேற்படி விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் அரசியல் பிரமுகர்களும், சமயத் தலைவர்களும் சேர்ந்து ஒரு பேச்சு வார்த்தை நடத்தினோம். வெகு விரைவாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட அங்கு இணக்கம் காணப்பட்டது.

காலத்துக்காலம் இவ்வாறான பிரச்சினைகள் தோன்று வதற்கு எம்மடையே போதியளவு புரிந்துணர்வு இல்லாமை ஒரு காரணம் எனவும் சுட்டிக்காட்டப் படுகிறது. எனவே நாம் இயன்றவரை சமனிலைத் தன்மை கொண்ட மனப்பான்மை யுடையோராக எம்மை மாற்றிக் கொள்வதன் ஊடாக அதனைச் சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
   
தற்போதைய ஆட்சியை இனவாதத்தின் மூலம் வீழ்த்துவதற்கு ஒரு குழு சூழ்ச்சி செய்கிறது. வெகு விரைவாக சட்டம் வரும். தற்போதைய ஆட்சியை இனவாதத்தின் மூலம் வீழ்த்துவதற்கு ஒரு குழு சூழ்ச்சி செய்கிறது. வெகு விரைவாக சட்டம் வரும். Reviewed by Madawala News on 6/04/2017 12:12:00 PM Rating: 5