Kidny

Kidny

இஸ்லாமும் மனித உரிமைகளும் .


அன்பர்களே! என் சகோரதர உறவுகளே! எமது ஒரே இறைவன் அல்லாஹ்வின் நாட்டத்தால் உங்கள் அனைவரையும் இந்த ஆக்கத்தினூடாக சந்திப்பதில் பெறும் மகிழ்ச்சியடைகிறேன்.

“அல்லஹ்விற்கே புகழனைத்தும் - அல்ஹம்துலில்லாஹ்” அல்லாஹ் எம்மனைவரையும் உண்மையின்பால் ஒன்றுபடச் செய்வானாக!

அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு அவனது திருப்தியே இதன் கூலியென எதிபார்த்து பெறுமதியான நேர செலவீட்டால் கடுமையான உழைப்பை முதலிட்டு உருவாகும் இச்சிறு எழுத்துருவினை வாசித்துப் பயன்பெறும் உங்கள் மீதும் மற்றும் எம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,  சமாதானமும்இ அருளும் என்றென்றும் உண்டாகட்டுமாக – “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹ.


ஏக இறைவன் அல்லாஹ்வால் பரிபூரணப்படுத்தப்பட்ட புனித இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்று நாம் அனைவரும் உண்மையின்பால் ஒன்றுபட்டுள்ளோம்.

இறைவனால் படைக்கப்பட்ட நாம் மத, மொழி,  நிற வேறுபாடுகளைத்தாண்டி ஒன்றுபட்டு சகோதரத்துவத்தால் பிணைக்கப்பட்டுள்ளோம். இவ்விணைப்பு நிலைத்திட சத்தியத்தின் அடிச்சுவட்டில் சகோரத்துவம் நிலைநாட்டப்படலே மிகப் பொறுத்தம் என்றெண்ணுகிறோம்.

 ஆகையால் உள்ளத்தால் ஒன்றுபட்ட நாம் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவைக் கட்டியெழுப்புவதும் தெளிவற்ற விடயங்களில் தெளிவு பெறுவதுமே மனிதநேய வழிமுறையுமாகும். இதனையே  இஸ்லாமிய மார்க்கமும் வழியுறுத்துகிறது.

இவ்வாறான தெளிவற்ற நிலையின் உச்ச வளர்ச்சியே புனித இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான இன்றைய மிகக் கடுமையான விமர்~னங்களாகும். குறிப்பாக “மனித உரிமைகள்” தொடர்பில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களாகும்.

பிறர் நலன் காப்பதைக் கடமையாகக் கொண்ட இஸ்லாத்தையும் அதனை இறைவேதமெனக் கொண்டு நடைமுறைமுறைப்படுத்துகின்ற முஸ்லிம்களையும் கேலி செய்து வேடிக்கை பார்த்து விமர்சிப்பவர்களின் கைங்கரியங்களின் வெளிப்பாடுகள் ஏராளம்.

 “மனித உரிமைகள்” தொரடர்பான இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்துவதுடன் சமகால தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும். உண்மையை ஏற்றுக்கொள்கின்ற எந்த உள்ளமுமே இஸ்லாமிய கோட்பாடுகளையும் அதன் வழிமுறைகளையும் நிறைவு காண்பார்கள் என்பதே நடைமுறையில் நாம் கண்ட யதார்த்தமாகும். நிரூபனங்களாகும்.

என் அருமை வாசகர்களே! இந்த ஆக்கம் “மனித உரிமைகளுக்கு அடிப்படைகளைக் கொடுத்தது இஸ்லாமிய மார்க்கம் இல்லையா? ” என்பதாகும். இது இன்றைய காலத்தின் தேவையாகும் என்றே எண்ணுகின்றேன்.

காலவோட்டத்தில் கயவர்களின் கபடத்தனமான கருத்துக்களால் கலங்கப்படுத்தப்பட முடியாமல் போன மானுட வாழ்விற்கு வழிகாட்டும் மானசீக மார்க்கம் இஸ்லாமிய மார்க்கத்தில் நிலைபெற்ற “மனிதம்” தத்துவத்தை தெளிவுபடுத்துவதானது முஸ்லிம்களுக்கிடையே சகோரத்துவத்தையும்இ முஸ்லிமல்லாத அன்பர்ளுடனான உறவுப்பாலத்தையும் ஏற்படுத்த உதவும் என்றே நம்புகின்றேன்.
யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் எமக்கு நலவை முடிவு செய்வாயாக! சத்தியத்தின்பால் ஒற்றுமைப்படுத்துவாயாக! நீதான் மன்னிப்பாளன், அன்பு செலுத்துபவன், அர்ரைன்  அதிபதி, கண்ணியத்திற்குரியவன்!!

பிண்ணனி

நாம் எட்டிவிட்ட 21ம் நூற்றாண்டு;இ நவீனம் மற்றும் நாகரீகம் வீசும்புயலாய் பரவி விட்டதாய் நம்பப்படும் காலம். தொழில்நுட்பம் கோபுரமாய் வளர்ந்து வேற்றுக்கிரகங்களை தொட்டுவிட்டதாய் விளம்பரப்படுத்தி வியப்பில் ஆழ்த்திய விஞ்ஞானிகள் மிஞ்ஞிப்போன ஆச்சரியம் நிறைந்த காலம். ஆயிரக்கனக்கான அரசியல் கருத்துக்களால் அதிகரித்த ஜனநாயகக் கோட்பாட்டுவாதிகளும் சமூக சீர்திருத்த தியாகிகளும் ஆயிரம் ஆயிரம். சட்டக்கோவைகள் ஆயிரம். தீர்வுத்திட்டங்கள் பன்னீராயிரம்.

ஆனால் தினந்தோறும் பூமியை சங்கமிக்கும் இரத்தத்துளிகளை நிறுத்த முடியாவிடினும் துடைக்கவேனும் முடியவில்லையே! இது அறியாமைக் காலமோ? அல்லது அறிவில் முற்றிய அறிவிலிகளாய் ஆனோமோ?! என்றெண்ணத்தோன்றுகின்றது.

நாகரீகம் வளர்ச்சி பெற்றதாய்க் கூறுகிறோம். மனிதநேயம் ஓங்கிவிட்டதாய் எண்ணுகிறோம்.  ஆனால் உலகில் எங்கு பார்த்தாலும் இரத்தக்கரைகள்இ உள்நாட்டிறைமை மீறல்கள்இ பெண்கள் மீதான வன்கொடுமைகள்இ சிறுவர் து~;பிரயோகங்கள்இ திருட்டுகள்இ கொலைகள்இ கொல்லைகள்இ இன ஒழிப்புக்கள் என்று மனித நேயமற்றுப்போய் மனித உரிமை மீறல்களின் செயற்பாடுகள் நீண்டுகொண்டே செல்கின்றமையானது நாம் மீண்டும் அறியாமைக் காலத்தை அடைந்து விட்டோமோ என்பதை அஞ்ச வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வென்ன???

அறியாமைக்காலம்! பிறர் மண்டை ஓட்டில் மது அருந்திய மனிதாபிமானமற்ற காலம். இவர்களிலும் மாற்றங்களும் திருத்தங்களும் சாத்தியமா?. சாத்தியமானதே! அறியாமைக்கால மிலேச்சத்தனமானவர்களை சத்தியத்தின்பால் அழைத்துஇ பண்பு பக்குவங்களைக் கற்றுக்கொடுத்து சகோதரத்துவத்தில் நிலைபெறச் செய்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றால் முஸ்லிம்களான எமக்கு இரண்டாம் கருத்துக்கிடையாது.

நடுநிலை சிந்தனையாளர்களும் நிராகரப்பதற்கில்லை. இதற்குக் காரணம் அல்லாஹ்வினுடைய வார்த்தைகள் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் மூலமாக சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஆட்சியேயாகும் என்பதை எந்தவொரு பக்குவமுள்ள சிந்தனையாளர்களும் ஏற்றே ஆவார்கள். எப்படி சாத்தியமானது?

சத்தியத்திற்கு நிகர் ஏதுமில்லை. எந்தக் கல் நெஞ்சத்தையும் நேசத்தால் நிறைத்து குளிர் தரும் பசுஞ்சேலையாய் மாற்றும் சக்தி சத்தியத்திற்குண்டு (அல்லாஹ்வின் நாட்டத்தால்);. இதனையே புனித மார்க்கம் இஸ்லாம் செய்தது. மனித நேயமற்றவர்களை புனிதர்களாக மாற்றியது. அறியாதவர்களை அறிஞர்களாகத் தோற்றுவித்தது. அடிமையாய் வாழ்ந்தவர்களை ஆட்சியாளர்களாய் மாற்றியது. மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் சத்தியத்தின் மேல் நிலைநிறுத்தியது.
குறிப்பிட்ட நிர்ப்பந்தமான மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களைத் தவிர உருவான கருவைக் கலைப்பது தண்டனைக்குரிய குற்றமென்று சட்டவாக்கம் செய்து பிறப்புரிமையை ஏதும் அறியா பச்சிலம் குழந்தைகளுக்கு வழங்கியது இஸ்லாமிய மார்க்கமாகும். பெண் குழந்தைகளை குழிதோண்டிப் புதைத்த கோரக்கலாச்சாரத்தை கண்டித்ததுடன் வேரோடு அழித்து பெண்ணுரிமையை நிலைநாட்டியது. திருமணத்தை ஹலால் என்று அனுமதித்து சிறுவர் துஷ்பிரயோத்தையும் பெண்கள் வன்கொடுமைகளையும் ஒழித்தது.

சன்மார்க்கப் போராட்டத்தில் தாக்கப்பட்டு உன்னதமான உயிரைப் பிரிய துடிதுடிப்பவருக்கு கொண்டுவரப்பட்ட தண்ணீரை தனது நண்பர் கேட்டார் என்பதற்காய் நற்கொடை கொடுத்து தன் உயிர் பிரிய இறையடி சேர்ந்த புனிதர்களை உருவாக்கி மனித நேயத்தை இவ்வுலகில் ஒளிவிடச் செய்ததே இச்சத்திய மார்க்கம் இஸ்லாம்.

அநியாயம் செய்பவனுக்கு அநீதி இழைக்கப்பட்டவன் மன்னிக்கும் வரை இறைவனிடத்தில் மன்னிப்பில்லை என்கிறது இஸ்லாம். அநீதியிழைப்பட்டவனிடமே மன்னிக்கும் அதிகாரம் என்பதன் மூலம் சட்டத்தை நிலைநாட்டுகிறது சன்மார்க்கம் இஸ்லாம். அரசனும் ஆண்டியும்இ அரபியும் அரபியல்லாதவனும் இஸ்லாத்தின் முன் சமம் என்று சட்டவாட்சியை நிலைநாட்டுகிறது. சொந்தக்கருத்துக்களால் பிரிவை நாடியவர்களை அல்லாஹ்வின் வசனங்களும் றஸ_ல் (ஸல்) அவர்களுடைய வழிமுறைகளும் உண்மையின்பால் ஒன்றுபடச் செய்து ஒற்றுமையை ஓங்கச் செய்ததே இப்புனித உண்மையினதும் நீதியினதும் மார்க்கம் இஸ்லாம்.
என் அருமை வாசகர்களே! இதர மத அன்பர்களே! கொடுமையை ஒழித்து,  அநீதியைக் குழி தோண்டிப் புதைத்து, நீதியை நிலைநாட்டி, அத்து மீறல்களை நிறுத்திஇ மனித நேயத்தை நிலைநாட்டிய இந்த சாந்தியினதும் சமாதானத்தினதும் மார்க்கமாம் இஸ்லாம் ஓர் சில கயவர்களின் கபடத்தனமான கருத்துக்களால் கலங்கப்படுத்தப்படுவதை அறிந்து கொள்ளும் எந்தவொரு ஈமானிய உள்ளத்தால் கண்மூடி நிம்மதியாய் உறங்க முடியும்? நான் என்பது மறுமைக்கான எனது உடலும் உயிருமாகும். மறுமையில் நாம் சொல்லப்போகும் பதில் என்ன?


இஸ்லாம் என்பது சாந்தியையும் சமாதானத்தையும் கொண்டு உண்மையில் கட்டியெழுப்பப்பட்டதாகும். பிறர் உரிமையை மதித்துப் பாதுகாக்கும் மார்க்கமாகும். ஆதலால் முரண்பாடுகளை கருத்துப்பரிமாற்றம் ஊடாக தெளிவுபடுத்துவது எமது கடமையாகும். இச்செயல் எனது சிறிய அறிவைத் தாண்டிய விடயம் என்பதை என்னால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடிகிறது. இருப்பினும் உண்மைக் கோட்பாடுகளை உங்கள் முன் சமர்ப்பிப்ப முயற்சிக்கிறேன்.

அடுத்தவர் உரிமையிலோ கண்ணியத்திலோ கைவைக்கும் உரிமையோ அதிகாரமோ எனக்கில்லை. அதேபோன்றே சாந்தியினதும் சமாதானத்தினதும் பரிணாமமாம் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற எந்தவொரு முஸ்லிமிற்கும் அவ்வதிகாரம் இல்லை என்பதே எமக்கான போதனையாகும். வழிகாட்டலுமாகும். உள்ளங்களில் அற்றுப்போன சகோதரத்துவத்தையும் சாந்தி சமாதானத்தையும் நிலைநாட்டும் இம்முயற்சியில் அல்லாஹ்வையும் மறுமையையும் நோக்கிய இப்பயணத்தை அல்லாஹ்விற்காக ஆரம்பிக்கின்றேன்.

இதனை நீங்கள் யாவரும் பொறுமையுடன் நடுநிலையைப் பேணி முழுமையாகப் படிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். உங்கள் அனைவரையும் உண்மையின்பால் சாந்தியினதும் சமாதானத்தினதும் கருப்பொருளில் ஒன்றுசேர்ந்திட அழைப்புவிடுக்கிறேன்.

(தொடரும்…)

தம்பாளை ஜெஸ்மில்  அப்துல் கபூர் 
இஸ்லாமும் மனித உரிமைகளும் . இஸ்லாமும் மனித உரிமைகளும் . Reviewed by Madawala News on 6/30/2017 06:50:00 AM Rating: 5