Kidny

Kidny

நீரை மையமாக கொண்ட கட்டுவன்வில் பிரதேச வாசிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை.


கட்டுவன்வில் பிரதேச வாசிகளாகிய நாம்  மிக நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு நீரை மையமாக கொண்டே எமது நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்திருந்தோம். ஆனால் இன்று எம்மிடம் பணத்தின் பெருமை எம்மை எங்கயோ கொண்டு சென்று விட்டது. இன்று நாம் எவ்வாறு நிலையில் பிறந்தோம், இருந்தோம் என்ற நிலையை மறந்து இன்று கொஞ்ச பணத்தை கண்டதும் எமது பழக்க வழக்கம் செயற்பாடுகள் என்பன எம்மை மாற்றி விட்டது.
 
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஈச்சங்குலம் எனும் (மீராகண்டாரின் குளம்) பற்றி இந்த குளம் பற்றி பெரிதாக யாருக்கும் சொல்ல தேவையில்லை. ஏனெனில், இதில் குளிக்காதோர் இருக்கவே முடியாது. இதில் நீச்சல் பழகியவர்களே அதிகம். எமது கிராமத்தை பொறுத்த மட்டில் பேருக்கு ஏற்றவாறே “கட்டுவன்வில்” ஆரம்பம் இருந்தே வில்லை மையமாக கொண்டே இருந்த்தது. பழைய வரலாறுகள் எமக்கு தேவையில்லை.

இவ்வாறு வளர்ந்த நாம் ஊரை சுற்றி குளம், வில்களை பல கொண்டு நடுவில் இருக்கின்றோம். ஊரை சுற்றிலும் வடக்கே ஊரு வில்லு, பெரிய வில்லு, ஈச்சங்குளம், தென் கிழக்கே மாவக்குலம், சம்முலன்குலம், மேற்கில் அவ்வாட குளம் என ஊரை சுற்றி குழு குழு என இருக்க வேண்டிய நாம் இன்று அதுவும் இந்த நாட்களில் 40’C யில் செம்மைய வெளுத்து கட்டும் நெருப்பு வெயிலுக்கு மத்தியில் காஞ்சி போய் கிடக்கின்றோம். காரணம் பேருக்கு குளங்களை வைத்து கொண்டிருக்கும் நாம் குளிக்க ஒரு சொட்டு நீர் கூட இல்லை, அதுவும் குடிநீர் திட்டம் இல்லையெனில், நிலைமை நாரிப்பொய் விடும்.

அந்த அளவுக்கு குளங்களை எம் ஊரவர்கள் பராமரித்து வருகின்றார்கள். விவசாயிகளுக்கு உரிய வேலைக்கு வாய்காலில் நீர் வேண்டும். இல்லயெனில், பள்ளிக்கு முன் நின்று வாய் கிழிய நீதி பேசுவார்கள். அதற்கு மட்டும் அவர்களுக்கு சமூக அக்கறை வந்து விடும்.

முதலில் மாவக்குலம் பேசவே தேவையில்லை. அதனை சுற்றிலும் காடு பிடித்து வயல் வரம்புகள்  நடுக்குளம் வரை சென்று விட்டது. மீன் பிடிக்க செல்பவர்கள் இடறிக்கொண்டு செல்லும் அளவிற்கு அங்கு குளம் எது வயல் எது என்ற பிரச்சினை.

ஆது  போகட்டும்  அடுத்தது எமது ஊரிற்கு இருக்கும் அடுத்த குளம் தான் ஈச்சன்குலம் இந்த குளம் பற்றி  பெரிதாக விளம்பரம் தேவையில்லை. கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த குளம் எவ்வளவு ஆழம் சென்று குளித்தாலும் உயிருக்கு ஆபத்து  இல்லை. முன்னொரு காலம் இருந்ததது ஊர்ல உள்ள அனைவரும் மிகவும் குதுகலாமாக குளித்து கொண்டிருந்த்தோம்.

எமது தாய்மார்கள், சகோதரிகள்  எந்த பிரச்சினையும் இன்றி ஊருக்கு மறப்பாக இருக்கும் குளத்தில் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தனர். அன்று ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு என வேறு வேறான குளிக்கும் இடங்களை கொண்டு இருந்த குளம் இன்று பாழடைந்து பார்ப்பவர்கள் இது குளமா? என கேட்கும் அளவிற்கு காடு பிடித்து போய் உள்ளது.


இன்று போய் பார்த்தல் வெளியே நீரை யாராளும் பார்க்க முடியாது முட்டை சள்ளை விளக்கி பார்த்தல் தான் தண்ணிரை காணலாம். அந்த அளவுக்கு குளத்திற்கு முட்டை சல்லு (lock)  பூட்டு போட்டு வைத்துள்ளோம். இந்த காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நீராட எமது பிள்ளை குட்டிகள் தத்தளித்து கொண்டு திரிகின்றனர். இது இன்றல்ல நீண்ட காலமாக இருக்கின்ற பிரச்சினை.

ஆரம்ப காலங்களில் முட்டை சல்லு மட்டுமே இருந்த்தது. இது பெரிய பிரச்சினையாக இருக்க வில்லை.  ஆனால் இன்று சாப்பை புல்லு எனும் ஒரு வகையான களை இனத்தை காணலாம். இது எந்த ஒரு அழமான இடத்தையும் குறுகிய காலத்தில் சமதரையாக மாற்றி விடும் அந்த அளவிட்கு கொடூரமான களை இனம். அது மட்டுமல்லாமல் நாம் ஒரு குளம் முழுதாக நாட்டி வளர்க்கும் பூந்தோட்டம் பேரு தெரியவில்லை சம்லன் குளம் நிறைய வைத்திருக்கும் மஞ்சள் பூ மரங்களும் இன்று வளர்ந்து வருகிறது. இது இப்படியே போனால் அந்த குளத்தையும் இழக்கும் பரிதாபம் ஏற்படும்.
முன் ஒரு காலம் இருந்தது வெளி ஊருகளில் இருந்து வரும் எமது உறவினர்கள் கட்டுவன்வில்க்கு வருவது நிம்மதியாக குளித்து விட்டு செல்லும் நோக்கத்திலேயே இருந்தது. ஆனால் இன்று நமது ஊரவர்களே குளிக்க இடம் இன்றி திரிகின்ற நிலைமை  ஏற்பட்டுள்ளது.


இந்த பதிவு பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் கட்டுவன்வில் KIG நிலையம் மற்றும் கட்டுவன்வில் CIRCLE, கட்டுவன்வில் அந்-நத்வா சேவையகம், கட்டுவன்வில் விடிவெள்ளி முகநூல் பக்கம்,   போன்ற சமூக இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ஊரின் வளர்ச்சிக்கு எடுத்து இருக்கும் முதலாவது திட்டமாகும். இதனை பற்றி நாங்கள்  பேசுவதட்கு காரணம் இந்த குளத்திற்கு சம்பந்தப்பட்ட ஒருவர் சரி ஏதோவொரு குழுமத்தில் இருக்க முடியும் அவர் இதற்கான நடவடிக்கைகள் எடுப்பாராக இருந்தால் அது கட்டுவன்வில் கிராமத்திகே செய்யும் மிக பெரிய சேவையாக இருக்கும் மேலும் இந்த குளம் இவ்வாறு பாழடைய காரணம் என்ன? இதற்கு பொறுப்பு யார்? இதற்காக நாம் என்ன செய்ய முடியும் என்ற கருத்துக்கள் பகிரப்பட்டால் இதற்கான சிறந்த முடிவை எடுக்க முடியும்.

இந்த பதிவை பார்க்க கூடிய அனைவரும் உங்கள் கருத்துக்களை வழங்க வேண்டும். நாம் எங்களுக்காக கேட்கவில்லை எமது கிராமத்தின் சொத்தையே அழியாமல் பாதுகாக்க கேட்கின்றோம். இது அனைவராலும் பேசப்பட வேண்டிய விஷயம் உங்களுக்கு தெரிந்த முறையில் செயற்படுங்கள்.  சிறந்த பலனை அடைவோம். முடியுமானவர்கள் தமது Group இல் இதனை பகிருங்கள் Facebook இல் பகிருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் இது சம்பந்தப்பட்ட ஒருவர் சரி இந்த பதிவை பார்த்து முயற்சி எடுப்பார்கள். இல்லையில் அவருடைய கருத்துக்களை வழங்குவார். அதை வைத்து நாம் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும்.


நாம் இதனை எப்போவும் போலவே அலட்சியமாக விடுவமானால் நடப்பது ஒன்றே ஒன்று தான். எமது கிராம மக்களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் எங்கு சரி  வெறுமனே நிலம் இருக்குமானால் அங்கு சென்று நான்கு வேலி கட்டைகளை போட்டு கம்பி அடித்து விடுவார்கள். இது அனைவரும்  அறிந்த விடயம். (இதனை பேச்சு வழக்கில் நன்றாக கூற  முடியும் எனினும் எழுத்து வழக்கில் கொஞ்சம் கடினம்.) இது மாதிரி இப்பவே  இரண்டு மூன்று வளவுகள் குளத்தின் உள்ளே இருக்கின்றது.

இது  காலப்போக்கில் யாருடைய சொத்தாக இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. கட்டுவன்வில் பாடசாலை நிலத்திற்கே இன்று போமிட் எடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படி பார்த்தல் குளமாவது கரையாவது. வடிவேலிடமாவது கிணறு வெட்டிய ரசிது இருந்த்தது ஆனால் நம்மிடம் குளம் வெட்டிய ரசிதும் இல்லை இருந்த இடமும் இருக்க போவது இல்லை.

மக்களே விழித்து கொள்ளுங்கள் எங்கள் கடமையை நாங்கள் முடித்து விட்டோம். உங்கள் கருத்துக்களை வையுங்கள். இதற்கான சிறந்த முடிவை எடுப்போம்.

கட்டுவன்வில் விடிவெள்ளி.
அஷ் - ஷெய்க் H . M . மூமின் முஹம்மட்.

நீரை மையமாக கொண்ட கட்டுவன்வில் பிரதேச வாசிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை. நீரை மையமாக கொண்ட கட்டுவன்வில் பிரதேச வாசிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை. Reviewed by Madawala News on 6/28/2017 07:49:00 PM Rating: 5