tg travels

மஹியங்கனையில் இனவாத தீயில் அகப்பட்டு இரவோடு இரவாக நடுரோட்டுக்கு வந்த முதலாளி...! (வீடியோ)


மஹியங்கனையில் இனவாத தீயில் அகப்பட்டு இரவோடு இரவாக நடுரோட்டுக்கு வந்த முதலாளி...!
அவருடைய நிலையை அவரே கூறுகின்றார் கேளுங்கள்...!

இந்த நல்லரசாங்கம் இதற்கு பதில் சொல்லவில்லை, நமது அரசியல்வாதிகள் இதனை கண்டு கொள்ளவில்லை மாறாக இவருக்கு காசி கலக்ஸன் பண்ணிகொடுத்தார்களாம் இதுவா தீர்வு என்று கேட்பதற்கு யாரும் இல்லை.

அரசியல்வாதிகளே இதற்கு பதில் சொல்லிவிட்டு நீங்கள் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆடம்பர இப்தாரில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இவரைப்போல் எத்தனை பேர் நடுவீதிக்கு வந்துள்ளார்கள் இதல்லாம் எதனால் நடந்தது அவர்களின் தனிப்பட்ட பகைமையா ? அல்லது சமூகத்துக்காக பழிவாங்கப்பட்டவர்களா ? இவர்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல் நாம் சந்தோசமாக இருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது என்று யோசித்து பார்த்தீர்களா ?

இப்படியான பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுடியாத அரசியல்வாதிகளாக நீங்கள் இருப்பற்கு உண்மையிலேயே நீங்கள் தகுதியானவர்கள்தானா ?
தேர்தல் காலங்களில் உங்களின் பாதுகாவலன் நாங்கள்தான் என்று கூறி வாக்குகளை கொள்ளையடித்து சென்ற உங்களுக்கு நிச்சயமாக இறைவன் சொர்க்கம் தருவான் என்றா நீங்கள் நம்பிக்கொண்டுள்ளீர்கள் ?
இவருக்கு உதவி செய்யுங்கள்...!

உதவி செய்வதும் தீர்வு வழங்குவதும் உங்கள் கடமை, ஏனென்றால் இந்த இனவாதம் நடந்த அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாகத்தான் நீங்கள் இருக்கின்றீர்கள், நீங்கள் இப்படியான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காமல் எதிர்வரும் தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியிலே வாக்கு பிச்சை கேட்டு வரக்கூடாது.

உண்மையான முஸ்லிமாக நீங்கள் இருந்தால், உங்கள் இயலாமையை கருத்தில் கொண்டு நீங்கள் இந்த விடயத்துக்கு தகுதியில்லை என்று ஒத்துக்கொண்டு விலகிச்சென்றுவிட வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.
மஹியங்கனையில் இனவாத தீயில் அகப்பட்டு இரவோடு இரவாக நடுரோட்டுக்கு வந்த முதலாளி...! (வீடியோ) மஹியங்கனையில் இனவாத தீயில் அகப்பட்டு இரவோடு இரவாக நடுரோட்டுக்கு வந்த முதலாளி...! (வீடியோ) Reviewed by Madawala News on 6/25/2017 11:22:00 AM Rating: 5