Ad Space avaiable

மாளிகாவத்தையில் 6270 இலட்சம் ருபா செலவில் மக்களிடம் கையளிக்கப்பட்ட 192 வீடுகள்.

(அஷ்ரப் ஏ சமத்)

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு நகா் வாழ் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடா் மாடி வீடமைப்புத்திட்டத்தின் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாளிகாவத்தை புகையிரத குவட்டாஸ் அருகில் லக்ஹிரு செவன 192 வீடுகள் 6270 இலட்சம் ருபா செலவில் நேற்று (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, நகர அபிவிருத்தி மெஹா பொலிஸி அமைச்சா் சம்பிக்க ரணவக்க பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் ஆகியோ்களது பங்களிப்புடன் இவ் திட்டம் மக்களிடம் கையளிகக்ப்படடது.  

இத்திட்டத்தில் மொத்தம் 768 வீடுகள் நிர்மாணிக்கபட உள்ளன. அவற்றில் மாளிகாவத்தையில் முதலாம் கட்டமும் இரண்டாம் கட்டமும்  384 தொடா் மாடி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்ள் 75ஆயிரம் குடும்பங்கள்  முடுக்கு வீடுகளிலும் பாதை ஓரங்களிலும், மனித வாழ்க்கை பொருத்தமற்ற வீடுகளில் வாழந்து வருகின்றனா்.

 அவா்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தி தொடா் மாடி வீடுகளை அமைத்து வருகின்றோம்.   இவ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்   5000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

 இத்திட்டங்கள்  2025வரை  தொடா்ந்து செல்லும். . ஏற்கனவே பொரளையிலும்  ஏனைய பிரதேசங்களிலும் 12 தொடா்மாடி வீட்டுத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

 இவற்றுக்காக 70 பில்லியன் ருபா தேவையாக உள்ளது. ஆனால் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் 10 பில்லியன் ருபாவை வைத்துக் கொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

கடந்த  அரசங்கம் இதனை ஆரம்பித்தாலும் அதில் பாரிய குறைபாடுகள், முறையான நிர்மாண ஒப்பந்தம், நஷ்டஈடுகள் போன்றவைகள் உள்ளடக்கப்பட வில்லை.

 சில நிர்மாணக்காரா்களை விலக்கி புதிய நிர்மாணக்காராகள் ஊடாக இந்த நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அமைச்சா் பாட்டலி சம்பிப்க்க ரணவக்க தெரிவித்தாா்.


மாளிகாவத்தையில் 6270 இலட்சம் ருபா செலவில் மக்களிடம் கையளிக்கப்பட்ட 192 வீடுகள். மாளிகாவத்தையில் 6270 இலட்சம் ருபா செலவில் மக்களிடம் கையளிக்கப்பட்ட 192 வீடுகள். Reviewed by Madawala News on 6/29/2017 10:40:00 AM Rating: 5