tg travels

(மடவளை) நாபான குண்ணேபான மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.

22.06.2017 அன்று  அதாவது நேற்று மடவளை நாபான குண்ணேபான பிரதேசத்தில் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் விஷேட  இப்தார் நிகழ்வும் அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் சுமார் 120 க்கும் மேற்பட்ட   ஊர் ஜமாத்தார்கள் , நிர்வாகிகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள் , நலன்விரும்பிகளும்  ஊரிலுள்ள முக்கியமான மாற்றுமத சகோதரர்களும்  கலந்து சிறப்பித்தனர்.

மற்றும் இந்த நிகழ்வில்  மௌலவி புஹாத் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு மாற்றுமத சகோதரர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிகழ்வுகளுக்கும் , இப்தாருக்கும் உடலாலும் , பொருளாலும் , பணத்தாலும், ஆலோசனையாலும்  பாடுபட்ட சகோதரர் இர்ஷாட் (சின்னதொர) அவர்களையும் மற்றும் ஊரின் அத்துணை அங்கத்தவர்களுக்கும் மஸ்ஜித் நிர்வாகம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது

(மடவளை) நாபான குண்ணேபான மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு. (மடவளை) நாபான குண்ணேபான  மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு. Reviewed by Madawala News on 6/24/2017 10:07:00 AM Rating: 5