tg travels

மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்கள்.


Muja ashraff

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கில் துர்க்மேனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான், தாஜிகிஸ்தான், வட கிழக்கில் சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றால் சூழப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான்.

இன்று ஆப்கானில் பின்லாடனைத் தேடி அமெரிக்க இராணுவம் படையெடுப்பதற்கு முன்னமே, மத்திய ஆசிய நாடுகளின் இயற்கை வளங்களை –  குறிப்பாக எண்ணெய், எரிவாயுவைத் தேடி அமெரிக்க நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.

2000 மைல் நீண்டு அகன்ற ஸ்டெபி புல்வெளிகளும், பனிபடர்ந்த நெடிய மலைத் தொடர்களும் கொண்ட மத்திய ஆசிய நாடுகள் அமெரிக்க முதலாளிகளின் நாக்கில் எச்சில் ஆறாய்ப் பெருகுமளவுக்கு இயற்கை வளங்களை கொண்டிருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் உஸ்பெக்கிஸ்தானிலிருக்கிறது. உலகிலேயே மிக அதிகமான வெள்ளி தாஜிகிஸ்தானின் மண்ணில் புதைந்திருக்கிறது. உலகின் நான்கில் ஒரு பங்கு யுரேனிய தாது கஜகஸ்தானில் இருக்கிறது.

வளைகுடாவிற்கும் மேற்கு சைபீரியாவிற்கும் அடுத்தபடியாக மிக அதிகமான எண்ணெய் இருப்பு கஜகஸ்தானிலும், துருக்மேனிஸ்தானிலும், அஜர்பைஜானிலும் உள்ளன. இந்த மத்திய ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் (66 லட்சம் கோடி)  கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.
மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்கள். மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்கள். Reviewed by Madawala News on 6/27/2017 05:02:00 PM Rating: 5