tg travels

பாடசாலை மாணவர்கள், மற்றும் அரசியல்வாதிகளும் வாடிக்கையாளர்களாக இருந்த விபச்சார விடுதி பொலிசாரால் சுற்றிவளைப்பு.


நீண்ட காலமாக இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால்
இன்று சுற்றி வளைக்கப்பட்டது.

கொழும்பு, கல்கிஸ்சை வித்தியாலயா மாவத்தையில் இரண்டு மாடிகளைக் கொண்ட சொகுசான கட்டடத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த இந்த விபச்சார விடுதிக்கு வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள், மற்றும் அரசியல்வாதிகளும் வாடிக்கையாளர்களாக இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபசார விடுதிக்கு உள்நுழைவுக் கட்டணமாக ரூ. 1300 அறவிடப்படுவதாகவும் உள்நுழைந்த பின்னர் பெண்களை ரூ. 6000  வரையில் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு புலனாய்வு பிரிவு ஊடாக கிடைத்த ஒரு தகவலுக்கமைய  இன்று 1300 ரூபாய் பணம் செலுத்தி நபர் ஒருவரை இந்த விபசார விடுதிக்குள் அனுப்பி வைத்ததன் பின்னர் இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விபச்சார விடுதியின் முகாமையாளர், ஊழியர்கள் மற்றும் 23 முதல் 39 வயதுடைய, அனுராதபுரம், பொலன்னறுவை, கித்துல்கல, தங்கல்லை, மொரட்டுவ, கந்தான ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 12 பெண்கள் இன்றைய சுற்றிவளைப்பில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள், மற்றும் அரசியல்வாதிகளும் வாடிக்கையாளர்களாக இருந்த விபச்சார விடுதி பொலிசாரால் சுற்றிவளைப்பு. பாடசாலை மாணவர்கள், மற்றும் அரசியல்வாதிகளும் வாடிக்கையாளர்களாக இருந்த விபச்சார விடுதி பொலிசாரால் சுற்றிவளைப்பு. Reviewed by Madawala News on 6/03/2017 09:04:00 PM Rating: 5