Kidny

Kidny

இரத்தினபுரி மக்களிடமிருந்து ஓர் அவசர வேண்டுகோள்.


- எம்.எல்.எஸ்.முஹம்மத்  இரத்தினபுரி -

வெள்ள அனர்தத்தைத் தொடர்ந்து இரத்தினபுரி மக்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளதால் அவை  தொடர்பாக  இலங்கை முஸ்லிம் சமூகம் அவதானம் செலுத்த முன்வருமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இரத்தினபுரி மாவட்டக் கிளையின் வழிகாட்டல்களின் கீழ் இயங்கி வரும் இரத்தினபுரி முஸ்லிம் அனர்த்த முகாமைத்துவ செயலகம் அவசர வேண்டுகோள்   விடுத்துள்ளது.

இது தொடர்பாக மேற்படி செயலகத்தின் முக்கிய பிரதிநிதிகளுள் ஒருவரான அல்ஹாஜ் தாஜுத்தீன் கருத்து தெரிவிக்கையில்

இம்முறை வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 1500 மேற்பட்ட இரத்தினபுரி முஸ்லிம் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் அனைத்தும் இரத்தினபுரி மாவட்ட ஜெம்மியத்துல் உலமாவின் வழிகாட்டல்களின் கீழ் பலரின் ஒத்துழைப்புடனும் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகிறது .

.இதுவரையில் இலங்கையின் நாலா பாகங்களில் இருந்தும் பல்வேறு வகையான உதவிகள்  இரத்தினபுரியை நோக்கி  வந்து   கொண்டிருக்கின்றன.அவைகள் அனைத்தும் உலமாக்களின் வழிகாட்டல்களின் கீழ் வெள்ளத்தினால் இரத்தினபுரியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து முஸ்லீங்களுக்கும் மிக அமானிதமாக பகிரப்பட்டு வருகிறது .அனர்த்தம் தொடர்பில் எமக்கு உதவி வரும் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டுமென நாங்கள்  அல்லாஹ்விடம்   பிராத்திக்கின்றோம்.அத்துடன் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மக்கள் சார்பாக எமது ஆழ்ந்த நன்றிகளையும் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்  இரத்தினபுரி மக்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் முக்கிய தேவைகள் தொடர்பில் அல்ஹாஜ் தாஜுத்தீன் விபரிக்கையில்

 இரத்தினபுரி மக்கள் தற்போது வெள்ள அனர்தத்தின் பின்னர் பல்வேறு வகையான சுகாதார பிரச்சினைகளுக்கும் வாழ்வாதார தொழிற் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக டெங்கு மற்றும் குடி நீருடன் தொடர்பான பல்வேறு வகையான சுகாதாரப் பிரச்சினைகளளால் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்நோக்கிய பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.நாளாந்தம் 10 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இரத்தினபுரி பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அல்ஹாஜ் தாஜுத்தீன் தெரிவித்தார்.

 அத்துடன் வெள்ள அனர்தத்தின் பாதிப்புக்களில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இரத்தினபுரி முஸ்லிம்  மக்களுக்கு தற்போது மிக அத்தியவசியமாக தேவைப்படும் நுளம்பு வலைகளை (1500) இயன்ற வரை அவசரமாக இம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முன்வருமாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளை  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மக்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.அத்துடன் இதுவரை இம்மக்களுக்கு மிக அவசியான பொருட்கள் என கருதப்படும் பெட்சீட்கள்,தலையனைகள் மற்றும்  படுக்கை மெத்தைகளும் வெள்ளத்தினால் முற்றாக சேமடைந்துள்ளதால் அவற்றை மீள பயன்படுத்துவது பல நோய்களுக்கு காரணமாக அமையும் எனவும் இரத்தினபுரியில் உள்ள   சுகாதார நிறுவனங்கள் இம்மக்களை அறிவுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும் .

எனவே மேற்படி  நுளம்பு வலைகள் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பில் இரத்தினபுரி மக்களுக்கு உதவ விரும்புவோர் அவசரமாக இரத்தினபுரி மாவட்ட ஜம்மிய்யா பிரதிநிதிகளை அல்லது  இரத்தினபுரி முஸ்லிம் அனர்த்த முகாமைத்துவ குழுவின் செயலாளர் அல்ஹாஜ் எம்.தாஜுத்தீன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இரத்தினபுரி முஸ்லீங்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சகல மேலதிக தொடர்புகளுக்கும்
அல்ஹாஜ் எம் தாஜுத்தீன் 077 739 52 10

இரத்தினபுரி மக்களிடமிருந்து ஓர் அவசர வேண்டுகோள். இரத்தினபுரி மக்களிடமிருந்து ஓர் அவசர வேண்டுகோள். Reviewed by Madawala News on 6/10/2017 10:18:00 PM Rating: 5