Ad Space avaiable

கட்டார் மீதான கழுத்துப்பிடி என்பது சவூதியின் மிகப்பெரிய வரலாற்றுத்தவறு.


-றிகாஸ் முஹம்மத் -

உலக சந்தையில் பெற்றோலிய விலை இறக்கத்தினால் ஒபெக் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டபோதும் அதை சவூதியால் இலகுவாக சரிசெய்து சிறிய பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளை பாதுகாக்கமுடியுமாக இருந்தது, ஆனால் ஈரான் என்ற அதிகாரம் தன்னை மீறி வளைகுடாவில் பிரதிபலிக்கக் கூடாது என்ற காரணத்துக்காக அமெரிக்காவுடன் சேர்ந்து தொடர்ந்து பெற்றோலிய விலை இறக்கத்திற்கு துணை போகின்ற சுயநலபோக்கையே சவூதி கொண்டுள்ளது. ஆக சவூதிக்கு அதிகாரப் பேய் பிடித்துவிட்டது என்று விமர்சிப்பதை பிழையாக பார்க்க முடியாது.

இந்த அதிகாரம் முற்றி தலைக்கேறிய நிலையில் சவூதி இருக்கின்ற போது தனது குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் எந்த நாட்டையும்
ஈரான் போன்ற தனது போட்டியாளனுடன் மச்சான் முறை கொண்டாட அனுமதிக்காது.

இந்த மச்சான் முறை கொண்டாட்டத்தின் எதிரொலிதான் சவூதியின் கட்டாருடனான தலைமுழுகல். பாவம் பஹ்ரைன், ஐக்கிய இராச்சியம், எகிப்து இவர்களுக்கெல்லாம் சவூதி மயம்.

ஆக தனது அதிகாரத்தை மீறி ஈரான் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சவூதி அரசு, தன் கைப்பிடியில் இருக்கும் எந்த நாடும் தன்னை மீறி அளவுக்குமேல் ஈரானுடன் இராஜதந்திர உறவுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் தக்க தண்டனை வழங்க எப்போதும் சவூதி அரசு தயாராகவே இருக்கிறது.

சவூதியின் இந்த முடிவானது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எத்தனை கட்டார் வாழ் சமூகத்தை மனதளவில் பாதிக்கபோகிறது என்பதை சவூதி அறியாமலில்லை.
கட்டார் மீதான கழுத்துப்பிடி என்பது சவூதியின் மிகப்பெரிய வரலாற்றுத்தவறு. கட்டார் மீதான கழுத்துப்பிடி என்பது சவூதியின் மிகப்பெரிய  வரலாற்றுத்தவறு. Reviewed by Madawala News on 6/06/2017 09:08:00 PM Rating: 5