Kidny

Kidny

பாம்பு கடித்தல் பற்றி ஒரு தெளிவான பார்வை.


ஒவ்வெரு வருடமும் உலகின் சனத்தொகையில்  பத்து இலட்சம் மக்கள் பாம்பு கடிக்கு உள்ளாகிறார்கள்.இதிலே ஏறத்தாழ 50%மானவை நச்சு தன்மையற்றவையாகும்.ஒரு வருடத்தில் உலகில் பாம்பு கடிப்பதினால் மரணமடைகிறவர்களின் எண்ணிக்கை 40,000 பேர்.இதில் இந்தியாவிலேயே ஆகக்கூடுதலாக ஒருவருடத்தில் 12,000 பேர் இறக்கின்றனர்.

இலங்கையில் ஒரு வருடத்திற்கு பாம்பு கடிப்பதினால்  இறப்பவர்களின் எண்ணிக்கை 800 பேர்.இலங்கையில் ஏழு குடும்பத்தை சேர்ந்த 97 வகையான இன பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலனவை கடித்தாலும் இவை நச்சுதன்மையற்றதால்(Non poison) எவ்வித பாதிப்புமில்லை.பாம்பு கடியினால் ஏற்படும் இறப்பில் 95% இறப்புக்கு காரணமான பாம்புகளாக Cobra(நாக பாம்பு),Common Indian Krait(கட்டு விரியன் பாம்பு),Russel Viper(புடையன் பாம்பு) போன்றவை விளங்குகிறது.

Cobra,Common Indian krait,Srilankan  Krait(எண்ணை விரியன்),Russel Viper,Saw Scaled Viper(மண் புடையன்)Green pit Viper,Sea Snake போன்றவை நச்சுதன்மை(Poison) கூடியதாக கருதப்படுகிறது.

பாம்பு கடிப்பதினால் அதனால் வெளியிடப்படும் நச்சுக்கள்(Toxin) கடித்த பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு(Local Reaction),உடல் பூராகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது(Systemic Reaction).இந்த நச்சுக்கள் மனிதனில் நரம்பு தொகுதி,குருதி உறைதலுக்குறிய பொறிமுறை போன்றவற்றில் தாக்கத்தை செலுத்துவதன் மூலம் மனித உடம்பில் பல தொகுதிகளை பாதிக்க செய்கிறது.

பாம்பு கடித்த பகுதியில் ஏற்படும் பாதிப்புகளாக கடித்த இடத்தை சூழ
-------------------------------------
  -நோவு(Pain)
  -வீக்கம்(Swelling)
 -பருக்கள் உருவாகுதல்(Blisters formation)
  -உணர்வில்லாமை(Paraesthesia) போன்றவையாகும்.

முழு உடம்பில் ஏற்படும் பாதிப்புகளாக
------------------------------------
  _வாந்தி(Vomiting),வயிற்று நோவு
  _கண்ணில்/பார்வையில் ஏற்படும் பாதிப்புகள்(பொருள் இரண்டாக விளங்குதல்-Double Vision,இமைகள் பகுதியாக/முழுமையாக மூடல்-Ptosis,கண்ணை சுற்றி வலி ஏற்படல்)
  -உடம்பிலுள்ள துவாரங்கள்,தோல்,மென்சவ்வு போன்றவற்றிலிருந்து இரத்தம் வெளியாகுதல்.
-தற்காலிக சிறுநீரக பாதிப்பு(Acute Renal Failure)
 -சுவாசிக்க சிரமப்படுதல்
 -சுவாசம் செயலிழந்துவிடுதல்(Respiratory Paralysis)
  -உணவை விழுங்க சிறமப்படல்(Dysphagia)
 -பேசுவதற்கு சிறமப்படல்(Dysphasia)
போன்றவையாகும்.

 நீண்ட கால பாதிப்புகளாக
----------------------------------
  -நீண்ட கால புண்(Chronic Ulceration)
  -என்புகளில் ஏற்படும் கிருமி தாக்கம்(Osteomyelitis)
  -நீண்ட கால சிறுநீரக பாதிப்பு(Chronic Renal Failure)
  -நரம்பு தொகுதியில் ஏற்படும் நிரந்தர பாதிப்புகள்(Chronic Neurological Deficit) என்பவையாகும்.

பாம்பு கடித்தால் செய்யவேண்டியவை
--------------------------------------
-பாம்பு கடித்தவரை ஆறுதல் படுத்த வேண்டும்(அனேகமான பாம்புகள் நஞ்சற்றவை/பயப்பட தேவையில்லை/வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் சரியாகி விடும் .....போன்ற வார்த்தைகள்)
-மோதிரம்,காப்பு,வலையல்,Sabona போன்றவற்றை உடனடியாக கழற்றுதல்.
-பாம்பு கடித்த இடத்தையும்,அதை சூழவும் சுத்தமான நீர்,Soapயினால் கழுவுதல்.
 -அவயவங்களில் கடித்திருந்தால் கால்/கைகளை நீட்டி வைப்பதோடு உதவிக்கு Splintஐ பயன்படுத்தல்.
_அவசரமாகவும்(Emergency),பாதுகாப்பாகவும்(Safely),சௌகரியமாகவும்(Comfortable) வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுதல்.

பாம்பு கடித்தால் ஒருபோதும் செய்யக்கூடாதவை
-------------------------------------
 -பயப்படல்/பாம்பு கடித்தவரை பயம் காட்டல்.
 -பாம்பு கடித்த இடத்தை சுற்றி/மேலால் துணி போன்றவற்றினால் இருக்கமாக கட்டுதல்(Tourniquet)
 -பாம்பு கடித்த இடத்தில் ஏதாவது மேலதிகமாக வெட்டுதல்,கீருதல்,காயத்தை பெரிதாக்கல்
 -பாம்பு கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சுதல்.
 -Ice,மிகுந்த குளிரான தண்ணீர் போன்றவற்றால் பாம்பு கடித்த இடத்தில் தடவுதல்.
-Aspirin போன்ற மருந்துகளை உள்ளெடுத்தல்.

 -பாம்பு கடித்த இடத்தை சுற்றி/மேலால் ஏன் துணி போன்றவற்றினால் இருக்கமாக கட்டக் கூடாது?
---------------------------------------------------
பலரது எண்ணம் பாம்பு கடித்த இடத்திற்கு மேலாக இறுக்கமாக கட்டுவதன் மூலம் நஞ்சு மேல் நோக்கி கடத்தப்படுவதை தடுக்கலாம் என்பதாகும்.இது முற்றிலும் தவறாகும்.இதயத்திலிருந்து நாடிகள் மூலம் கால்,கை உற்பட உடம்பின் பல பகுதிகளுக்கு ஒட்சிசன் ஏற்றிய குருதி கொண்டு செல்லப்படுகிறது(நுரையீரல் நாடி தவிர).அது போல எல்லா இடங்களில் இருந்தும் இதயத்திற்கு நாளங்கள் மூலம் குருதி ஒட்சிசன் இரக்கப்பட்ட குருதி கொண்டு செல்லப்படுகிறது(நுரையீரல் நாளம் தவிர).
இதயத்தை நோக்கி குருதியை கொண்டு செல்லும் நாளங்களுடன் சிறு சிறு குழாய்கள்/மைத்துளை குழாய்கள் தொடர்பினை ஏற்படுத்தி இருக்கும்.

பாம்பு கடித்தவுடன் நஞ்சானது இக்குழாய்கள் மூலம் உடம்பில் எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதால் ஒரு இடத்திற்கான நஞ்சின் செறிவு குறைக்கப்படுவதால் மேற்படி இடத்தில் நஞ்சின் தாக்கம் குறைவாகும்.இருக்கமாக கட்டுவதால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நஞ்சுகள் குவிந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதைவிட இருக்கமான கட்டு போடுவதன் மூலம் இதயத்திலிருந்து கொண்டுவரப்படும் ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியின் விநியோகம் தடைப்படுவதால் ஒரு சில நேரத்திலே அந்த இடத்திற்கு கீழுள்ள கலங்கள் நிரந்தர சாவுக்கு உள்ளாகிறது(Avascular Necrosis).இதனால் பின்னர் இப்பகுதி செயற்பாடின்றி அகற்றவேண்டிய நிலை ஏற்படும்.
இது போல நாளத்தினால் கொண்டு செல்லப்படும் இரத்தம் தடைப்படுவதால் இவை கடித்த இடத்தை சூழ குமிந்து வீக்கத்தை ஏற்படுத்தும்.எனவே ஒருபோதும் பாம்பு கடித்த இடத்தில்/மேலாக இருக்கமான கட்டு போட வேண்டாம்.


பாம்பு கடியிலிருந்து தவிர்ந்து கொள்ள
-------------------------------------
 -கூடுதலாக மழை,வெள்ளம் ஏற்பட்ட பின்னரே பாம்புகள் அதிகமாக காணப்படும்.வயல்வெளிகளிலும் கூடுதலாக இருக்கும்.இது சம்பந்தமான அறிவை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தல்.
 -Shoes,நீண்ட Trouser போன்றவற்றை அணிவதுடன் இரவு வேளையில் வெளியில் நடமாடும் போது Torchஉடன் செல்லுதல்.
 -வெளியில் தூங்குவதை தவிர்த்து கொள்ளுதல்.
 -வீட்டையும்,சூழலையும் தினமும் சுத்தமாக வைத்திருத்தல்.

எனவே பாம்பு கடித்தால் மேற்படி முறையைப்பற்றி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்ற போது இறப்பு வீதத்தை குறைக்கலாம்.இதற்கு பதிலாக வீட்டு வைத்தியம்,உள்ளூர் வைத்தியம் என பெறுமதியான நேரங்களை கழித்துவிட்டு பிந்திய நிலையில் பாம்பின் நஞ்சு உடம்பின் எல்லா இடங்களிலும் சென்ற பின் வைத்தியசாலைக்கு அணுமதிப்பதனாலேயே அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன.

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.

பாம்பு கடித்தல் பற்றி ஒரு தெளிவான பார்வை. பாம்பு கடித்தல் பற்றி ஒரு தெளிவான பார்வை. Reviewed by Madawala News on 6/29/2017 11:45:00 AM Rating: 5