tg travels

எனது பதக்கத்தை வாங்க பலர் வரிசையில் காத்திருகின்றனர். 25 கோடி ரூபாக்கு மேல் பணம் தரவும் பலர் தயார்.


தான் பெற்றுக்கொண்ட பதக்கத்தை விலைக்குப் பெற்றுக் கொள்வதற்கு வெளிநாடுகள் பலர் வரிசையில் காத்திருப்பதாகவும், அதனை  25 கோடி ரூபாவை விட கூடிய தொகைக்கு விற்க முடியும் என்பதை தான் அறிந்து கொண்டதாகவும்  ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பதக்கத்தின் விலையை உலகம் தெரிந்து வைத்துள்ளது போன்று விளையாட்டுத் துறை அமைச்சர் தெரியாதிருப்பது கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பதக்கத்தை விற்பனை செய்து வரும் பணத்தில், விளையாட்டுத் துறை அமைச்சரின் எதிர்வரும் தேர்தலுக்கும் செலவுக்கும் வழங்க முடியும் எனவும் சுசந்திகா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுசந்திகா தன்னுடைய பதக்கத்தை ஏலத்தில் விட்டால், அதனை விளையாட்டுத் துறை அமைச்சு கொள்வனவு செய்து அரசுடமையாக்க விரும்புவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனது பதக்கத்தை வாங்க பலர் வரிசையில் காத்திருகின்றனர். 25 கோடி ரூபாக்கு மேல் பணம் தரவும் பலர் தயார். எனது பதக்கத்தை வாங்க  பலர் வரிசையில் காத்திருகின்றனர். 25 கோடி ரூபாக்கு மேல் பணம் தரவும் பலர் தயார். Reviewed by Madawala News on 6/08/2017 11:06:00 AM Rating: 5