tg travels

சுற்றுப் பிரயாணம் செல்வோரே! காலம் கலிகாலம். கவனமாய் கால் வைப்போம்!


புனித நோன்புப் பெருநாளை அடுத்து நம்மவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்வது வழமையானதுதான்! எனினும் தற்போதைய சூழலானது முஸ்லிம்களை ‘ஏதோவொரு வகையில் வம்புக்கிழுப்பது’ அல்லது ‘வம்பை விலைக்கு வாங்க வைப்பது’ என்பதிலேதான் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

மறுபுறம் நம் வாலிபர்கள் ஊர் எல்லையைத் தாண்டியதும் வேறொரு கிரகத்துக்கு சென்றதுபோல் நடை, உடை, பாவனையை மாற்றி; யாரையும்  எவ்விடத்தையும், எந்நிலைமைகளையும் கருத்திற்கொள்ளாது, கவனத்திட்கொள்ளாது செயல்படுவது மிகவும் கவலைக்கிடமான வருந்தத்தக்கத விடயமாகும்.

நாட்டில் இதுவரை நடைபெற்ற விடயங்களுள் முஸ்லிம்களின் பொறுமை காரணமாக அவர்களது சீண்டல்கள் எவ்வித பலனையும் அவர்களுக்கு கொடுக்கவில்லை. இனிமேலும் நாம் மாட்டிக்கொள்ளவும் கூடாது.

இறுதியாக, பெரும்பான்மையினரில் 98 வீதமானோர் மிக மிக  நல்லவர்கள். 2 வீதத்துக்காக 98 வீதத்தைப் பகைத்துக்கொள்வது பொருத்தமாகாது. எனவே நாம் எமது நடவடிக்கைகளை நபிவழிக்கேற்ப நல்லதாய் அமைத்துக்கொள்வோம்! மறுபுறம் நம் நாட்டினதும் முஸ்லிம்களினதும்  வரலாறுகளையும் கட்டாயம் தேடிப்படிப்போம், கற்பிப்போம்.

அன்புடன் ரிஸ்வான் எம் உஸ்மான்.
சுற்றுப் பிரயாணம் செல்வோரே! காலம் கலிகாலம். கவனமாய் கால் வைப்போம்! சுற்றுப் பிரயாணம் செல்வோரே!  காலம் கலிகாலம். கவனமாய் கால் வைப்போம்! Reviewed by Madawala News on 6/25/2017 11:34:00 AM Rating: 5