Kidny

Kidny

உன் தூதரின் உம்மத்தை காக்குமாறு கண்ணீர் வடிக்கிறேன்.


இஸ்ரேலும், ஈரானும்!
கட்டாருக்கு நண்பர்கள்.

இவ்விருவரதும் போசகன் அமெரிக்காவோ!
சவுதிக்கு நண்பன்.

பல்முனை  சதியால் பின்னப் பட்ட வலையில்!
சிக்கியுள்ளதோ நம்மவர்கள்.

யதார்த்தம் புரியாதோர் கீபோர்ட்
போராட்டத்தில்.

உத்தமன் எனும் பட்டியலில்!
இருவருக்கும் இடமில்லை.

சமய, சமூக அக்கறையும்!
இவர்களிடமில்லை.

செல்வமும், பதவியும்!
இவர்களை கேனயனாக்க,

இவர்களது சுகபோகத்தை காக்கும் கேடயமாக!
மனித உயிர்கள்.

சமயோசிதமற்ற எழுத்தாளர்கள்!
சட்டென வழங்கும் கருத்துக்களால்!

யுத்த சங்க நாதம் ஒலிக்கிறது!
முகநூலெங்கிலும்.

கட்டாரும், சவூதியம்!
போரை ஆரம்பிக்க முன்!

எழுத்துப் போர் ஏவுகனைகள்!
சமூகத்தை சுக்கு நூறாக்கி விட்டன.

இறைவா! உன்னிடம் மண்டியி்ட்டு!
உன் தூதரின் உம்மத்தை காக்குமாறு
கண்ணீர் வடிக்கிறேன்.

யா அல்லாஹ்.......

இவன்:- அபூ ஸுமையா
மடவளை பஸார் (07-06-2017)
உன் தூதரின் உம்மத்தை காக்குமாறு கண்ணீர் வடிக்கிறேன். உன் தூதரின் உம்மத்தை காக்குமாறு கண்ணீர் வடிக்கிறேன். Reviewed by Madawala News on 6/10/2017 11:46:00 AM Rating: 5