Ad Space avaiable

பண்டாரவளையில் மூவினத்தவர்களும் இணைந்து கடையடைப்பு + ஆர்பாட்டம். (படங்கள்)


உமா ஓய வேலைத் திட்டத்தினால் அதற்கு அருகிலுள்ள வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என கூறி, பண்டாரவளை நகரில் மூவினத்தவர்களும் சேர்ந்து  கடைகளை அடைத்து  போராட்டமொன்றை  மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டாரவளை நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருவது குறைந்து காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப் பகுதியில் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாமையால், நகரில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், பிதுனுவெவ முதல் பண்டாரவளை வரையான பகுதிகளிலுள்ள அனைத்து இடங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.


உமா ஓய விவகாரம்: பண்டாரவளையில் ஹர்த்தால்
பண்டாரவளையில் மூவினத்தவர்களும் இணைந்து கடையடைப்பு + ஆர்பாட்டம். (படங்கள்) பண்டாரவளையில் மூவினத்தவர்களும் இணைந்து கடையடைப்பு + ஆர்பாட்டம். (படங்கள்) Reviewed by Madawala News on 6/28/2017 12:51:00 PM Rating: 5