tg travels

அவுஸ்திரேலியா வெளியேறியது... பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்.


சாம்பியன்ஸ் டிராபி ஏ பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 71 ரன்களும், பின்ச் 68 ரன்களும், சுமித் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்து வீசிய மார்க் வுட் மற்றும் ரஷீத் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

 அடுத்து மோர்கன்-ஸ்டோக் ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இறுதியில் மழை குறுக்கிட்டதை தொடர்ந்து 240/4 என்ற நிலையில் டக்வத் லூவிஸ் முறையில் இங்கிலாந்து வென்றது.

  இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியதால் பங்களாதேஷ்  அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா வெளியேறியது... பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல். அவுஸ்திரேலியா வெளியேறியது... பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல். Reviewed by Madawala News on 6/10/2017 11:27:00 PM Rating: 5