Kidny

Kidny

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் பொறுமை காக்கக்கூடாது. மௌனம் சாதிக்கக்கூடாது

முன்னாள் அமைச்சர் அஸ்வர்
நாட்டில் முஸ்லிம் சமூகம் முன்­னெப்­போதும்  இல்­லா­த­வாறு அச்­சத்­து­டனும், பீதி­யு­டனும் நாட்­களைக் கடத்­து­கி­றது.

பெரும்­பான்மைச் சமூகம் வாழும் பிர­தே­சங்­க­ளி­லுள்ள முஸ்லிம் பெண்கள் இரவில் தராவீஹ் தொழு­கைக்கு  கூட  செல்­வ­தற்குப் பயப்­ப­டு­கின்­றனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் ஜனா­தி­ப­தியை உட­ன­டி­யாகச்  சந்­தித்து இந்­நி­லைமையைத்  தெளி­வு­ப­டுத்த வேண்டும் என முன்னாள் அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

நாட்டின் பல பகு­தி­களில் தொட­ராக இடம்­பெற்று வரும் பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்கள் தொடர்பில் ஏ.எச்.எம்.அஸ்வர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். 

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன சர்­வ­மத  தலை­வர்­களை அழைத்து மதங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு முன்பு  முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் எதி­ரான தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். இதற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் உட­ன­டி­யாக ஜனா­தி­ப­தியை சந்­தித்து இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.
 
ஜனா­தி­ப­தியை முஸ்லிம் அமைச்­சர்கள் தனித்­த­னியே சந்­தித்து முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னை­களை முன்­வைப்­பதில் எந்தப் பயனும் ஏற்­படப் போவ­தில்லை. 

ஒவ்­வொரு வரு­டமும் ரமழான் காலத்­திலே  முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ரான  செயற்­பா­டுகள்  கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­கின்­றன. நாட்டில் ஓர்  அசா­தா­ரண நிலையை உரு­வாக்­கு­வ­தற்கு  இன­வாதக்  குழுக்கள் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்­றன. எனவே அர­சாங்கம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்டும். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த  ராஜபக் ஷவின்  காலத்தில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. வர்த்­தக நிலை­யங்கள் எரிக்­கப்­ப­டு­கின்­றன என்று கோஷ­மெ­ழுப்­பப்­பட்­டது. முஸ்­லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆட்­சியில் அமர்த்­தி­னார்கள். ஆனால் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலே முஸ்­லிம்கள் பெரிதும்  பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

அச்­சத்­து­டனும், பீதி­யு­டனும்  வாழ வேண்டியேற்பட்டுள்ளது. நபிகள் நாயகம்  மற்றும் அல்லாஹ்வுக்கு எதிராக  கோஷமெழுப்பப்படுகிறது.

குர்ஆன்  அவமதிக்கப்படுகிறது. எனவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் பொறுமை காக்கக்கூடாது. மௌனம் சாதிக்கக்கூடாது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் பொறுமை காக்கக்கூடாது. மௌனம் சாதிக்கக்கூடாது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் பொறுமை காக்கக்கூடாது. மௌனம் சாதிக்கக்கூடாது Reviewed by Madawala News on 6/01/2017 11:30:00 AM Rating: 5