tg travels

கைது செய்யப்பட்டுள்ளவர் தொடர்பில் எம்மிடம் இதுவரை எதுவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை ; BBS


மஹரகம, நுகேகொட பகுதிகளில் முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்த நபர் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் இது விடயாமாக இதுவரை தங்கள் அமைப்பிடம் உத்தியோகபூர்வமாக விசாரணைகள் மேற்கொள்ளவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.


அரச தகவல் திணைக்களத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக அறிவிப்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி குறித்த சந்தேக நபர் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர் என தெரிவித்திருந்தார்.


நீண்டகாலமாக பொதுபல சேனாவில் இணைந்து செயலாற்றி வரும் இவர், பொதுபல சேனாவின் பல நிகழ்ச்சிகளில் ஊர்வலங்களில் கலந்து கொண்டவர் எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும், அதேவேளை இனவாத கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவேற்றி வந்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

தங்கள் அமைப்பின் கூட்டங்களுக்கு வந்தமையை வைத்து தங்கள் காரியாளயத்துக்கு வந்தமையை வைத்து ஒருவர் எமது உறுப்பினர் என கூறமுடியாது என பொதுபல சேனா ஏற்கனவே இன்று நண்பகல் அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரை விசாரனை மேற்கொள்ளவில்லை என டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் தொடர்பில் எம்மிடம் இதுவரை எதுவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை ; BBS கைது செய்யப்பட்டுள்ளவர் தொடர்பில் எம்மிடம் இதுவரை எதுவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை ; BBS Reviewed by Madawala News on 6/11/2017 10:56:00 PM Rating: 5