Kidny

Kidny

மறைவான இடத்தில் இருந்து ஞானசார தேரர் எழுதியுள்ள கடிதம் !


தற்போது தலைமறைவாக இருக்கும் ஞானசார தேரர் இரகசிய இடத்திலிருந்து நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.


குறித்த கடிதத்தில் , அனைவரும் தங்கள் மரண ஊர்வலத்துக்காக வாயூறக் காத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர பௌத்தத்துக்கு இந்நாட்டில் இழைக்கப்படும் அநீதி குறித்து பேசுவதற்கு யாரும் இல்லையெனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் பேச வேண்டிய விடயங்களின் மௌனித்திருந்து கொண்டு பயனற்ற அரசியல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற முக்கிய மக்கள் பிரச்சினைகளைப் பற்றிக்கூட பேச முடியாத அளவு எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருவதாகவும் தம்மைப் பிரிவினைவாதியாக அடையாளப்படுத்தி அதில் சுகம் காண்பதாகவம் குற்றஞ்சாட்டியுள்ள ஞானசார தேரர் தங்கள் அமைப்பின் பின்னால் மக்கள் வெகுண்டெழுந்து வருவதாகவும் அதற்கான காரணம் தமது அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.



மறைவான இடத்தில் இருந்து ஞானசார தேரர் எழுதியுள்ள கடிதம் ! மறைவான இடத்தில் இருந்து ஞானசார தேரர் எழுதியுள்ள கடிதம் ! Reviewed by Madawala News on 6/18/2017 01:40:00 PM Rating: 5