tg travels

கூடிக்களையும் கூட்டங்களையும் சந்திப்புக்களையும் நடத்தி பயணில்லை ..


பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றாதவரை முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹுமான் குறிப்பிட்டார்.

ஹொரவபதான  பத்தாவ பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள பள்ளிவாயலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அங்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலமை தொடர்பில் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.

முஸ்லிம்களின் சமகால விடயங்கள் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களிலும் தவறாமல் கலந்துகொள்ளுபவர்களில் நானும் ஒருவன்.இதனை நான் அரசியல் நோக்கங்களுக்காக சொல்லவில்லை சமூகத்திற்கு ஏதும் பிரச்சினை என்றால் நாங்கள் முதலாவதாக நிற்கவேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் செய்துவருபவன் நான். அதற்காக மற்றவர்கள் அப்படி இல்லை என்று நான் சொல்லவரவில்லை.அனைவரும் அவர்களின் பங்களிப்புகளை கனிசமாக வழங்கி வருகிறார்கள்.

இருந்தபோதும் இப்போது நாம் ஒரு இக்கட்டான சூழைநிலையில் உள்ளோம். எமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதங்களை மறந்து குரல்கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நாம் எதிர்நோக்கி உள்ள சவால்களை எதிர்கொள்ள முடியாது.

அண்மைக்காலங்களில் நாம் பல முஸ்லிம் எம் பிக்கள் பல சந்திப்புகளை கூட்டங்களை நடத்தியிந்தோம்.அந்த கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்கள்  முழுதாக செயலில் வந்ததை காணவில்லை என சிலர் எம்மிடம் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். நாம் போடும் கூட்டங்களில் கூடி களையும் கூட்டம் எனவும் சிலர் கூறுகிறார்கள் .

மக்களின் விமர்சனங்களுக்கு நாம் கட்டாயமாக செவிசாய்க்க வேண்டும். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.ஒரு புள்ளியில் ஒன்றுபட வேண்டும். எமது சந்திப்புக்கள் சம்பிரதாயபூர்வமாக சந்திப்புகளாக இருக்கக்கூடாது.இந்த விடயத்தை எமது தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் வலியுறுத்தி வருகிறார்.

எமக்கு நீண்ட கால திட்டங்கள் அவசியல்.எமது சமகால சவால்களுக்கு  நாம் கூட்டாக குரல்கொடுக்காதவரை எந்த ஒரு பிரச்சினைக்கும் எமக்கு தீர்வுகாண முடியாது எனவும் சமகால பிரச்சினைகளில் அனைவருடனும் இணைந்து செயலாற்ற தான் எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாக இஷாக் றஹுமான் மேலும் குறிப்பிட்டார்.
கூடிக்களையும் கூட்டங்களையும் சந்திப்புக்களையும் நடத்தி பயணில்லை .. கூடிக்களையும் கூட்டங்களையும் சந்திப்புக்களையும் நடத்தி பயணில்லை .. Reviewed by Madawala News on 6/04/2017 06:13:00 PM Rating: 5