Ad Space avaiable

மருதமுனையில் உள்ள அரச பொதுக் காணிகள் பொதுத் தேவைகளுக்கு முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்- கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்..

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட  அரச பொதுக் காணிகள் பாதிக்கப்பட்ட மக்களின் பொதுத் தேவைகளுக்கு முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார்.

மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துளைப்பு  அமையத்தின் (SESEF)   தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான  எம்.எப்.ஹிப்பதுல் கரீம்  தலைமையில் (03.06.2017) மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலையத்தில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலை அமையத்தின் செயற்பாட்டாளரும் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரியுமான எம்.ஐ.எம்.வலீத் நெறிப்படுத்தினார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதிப் பிரதம செயலாளர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் அரசாங்கத்தினால் சுவிகரிக்கப்பட்ட பொதுக் காணிகள் 33 ஏக்கர் ஆகும். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலப்பரப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமாக உள்ள 23 ஏக்கர் நிலப்பரப்பையும் எதிர்கால சந்ததிகளின் தேவைகளுக்கு முறையாக திட்டமிடப்பட்ட ஒழுங்கில் பயன் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் அரச பொது நிறுவனங்கள் எமது பிரதேசத்தில் அமைக்கப்பட வேண்டுமானால் பொதுக் காணிகளின் தேவை அவசியமாகும். எனவே வீணான முறையில் அரச பொதுக் காணிகள் துண்டாடப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றார்.

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கிழக்கு மாகாண கால் நடை சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ.எம்.பாஸி, கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி, பள்ளிவாசல்களின் தலைவர்கள், காணி உத்தியோகத்தர், கிராம சேவையாளர்கள் உட்பட ஊரின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனார். 

இறுதியில் மருதமுனையில் உள்ள அரச பொதுக் காணிகளை பொதுத் தேவைகளுக்கு  பயன்படுத்துவது தொடர்பான பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

01.சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு (முஸ்லிம் பிரிவு), பிறான்ஸ் சிற்றி, 65 மீறறர் வீட்டுத்திட்டம், மஸ்ஜிதுல் இஸ்லாம் நகர் பிரதேச மக்களின் பொதுத் தேவைகளுக்காக மட்டுமே காணிகளை பயன்படுத்துதல்.

02. அனைத்து பள்ளிவாசல்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலாளருடன் இணைந்து பொருத்தமான நிலப்பயன்பாட்டுத் திட்டம் ஒன்றை தயார் செய்தல்.

03. மேட்டுவட்டை பிரதேசத்தில் குடியேறிய மக்களின் தேவைகளான மையவாடி, பொது வாகன தரிப்பிடம், பிரதேச சபை, மின்சார சபை, நீர் வழங்கல் அலுவலகம், கல்வி அபிவிருத்திக்கான நிலையம், சிறுவர் பூங்கா, பொதுச்சந்தை, வாசிகசால ... போன்ற பொது தேவைகளுக்கு பயன்படுத்துதல்.

04. தனியார் அமைப்புகளுக்கு காணிகள் வழங்குவதை தவிர்த்து அரச பொதுத் தேவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்திக்காக குறித்த காணியை பயன் படுத்துதல்.

 குறித்த தீர்மானத்தை பிரதேச செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கையளிப்பது எனவும் இங்கு முடிவெடுக்கப்பட்டது
மருதமுனையில் உள்ள அரச பொதுக் காணிகள் பொதுத் தேவைகளுக்கு முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்- கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்.. மருதமுனையில் உள்ள அரச பொதுக் காணிகள் பொதுத் தேவைகளுக்கு முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்- கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்.. Reviewed by Madawala News on 6/04/2017 08:47:00 PM Rating: 5