Kidny

Kidny

எல்லா பிரச்சினைகளையும் மஹிந்தவே தோற்றுவித்தார்


உமா ஓயா, சைட்டம் மருத்­துவக் கல்­லூரி, மீதொட்­ட­முல்ல குப்பை மேடு விவ­காரம் உள்­ளிட்ட வேலை­நி­றுத்தப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்து பிரச்­சி­னை­களையும் மஹிந்த ராஜ­பக்ஷவே தோற்று­வித்தார். டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்­துள்ள நிலையில் இந்த தரு­ணத் தில் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களை செய்ய வேண்டாம். மக்கள் மீது அக்­கறை காட்­டுங்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்­தது.


ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரே­ராவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­பால ஹெட்­டி­யா­ரச்­சியும் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

அவர்கள் மேலும் தெரி­வித்­த­தா­வது, 

உமா ஓயா, சைட்டம் மருத்­துவ கல்­லூரி, மீதொட்­ட­முல்ல குப்பை மேடு விவ­காரம் உள்­ளிட்ட தற்­போது வேலை­நி­றுத்த போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்துப் பிரச்­சி­னை­களையும் மஹிந்த ராஜ­பக் ஷவே தோற்­று­வித்தார்.

எனினும் அந்த பிரச்­சி­னைகள் அனைத் தும் தற்­போது எம்­மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன. இருந்த போதிலும் குறித்த அனைத்து சவால்­க­ளையும் நாம் முகங்­கொ­டுத்து வெற்­றி­ பெற்றோம். எனவே டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்­துள்ள நிலையில் இந்த தரு­ணத்தில் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களை செய்ய வேண்டாம். மக்கள் மீது அக்­கறை காட்­டுங்கள். பட்டம் பெற்றால் மாத்­திரம் போதாது. மனி­தா­பி­மானம் இருக்க வேண்டும். வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­தினர் போராட்டம் நடத்த மாட்­டார்கள் என்று நம்­பு­கின்றோம். 


அண்­மை­க் கா­ல­மாக நாட்டில் தோன்­றி­யுள்ள போராட்­டங்­க­ளுக்கு முன்னாள் ஜனா ­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவே பொறுப்பு கூற வேண்டும். உமா ஓயா திட்டம் ஆரம்­பிக்­கப்­படும் போது எந்­த­வொரு ஆய்வு அறிக்­கையையும் பெற்­றுக்­கொள்­ளாமல் மஹிந்த ராஜ­பக் ஷ உமா ஓயா திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளார். 


இதுபோன்று மாலபே சைட்டம் மருத்து வக் கல்­லூ­ரிக்கு 600 மில்­லியன் ரூபா கடன் கொடுத்து அந்த கல்லூரியை தனது பூரண அனுசரணையுடன் வழிநடத்திச் சென்றார். ஆகவே செய்வதெல்லாம் செய்துவிட்டு தற்போது எதுவுமே தெரியாதது போன்று நடிக்கின்றார் என்றனர். 

எல்லா பிரச்சினைகளையும் மஹிந்தவே தோற்றுவித்தார் எல்லா பிரச்சினைகளையும் மஹிந்தவே தோற்றுவித்தார் Reviewed by Madawala News on 6/30/2017 01:53:00 PM Rating: 5