Ad Space avaiable

லண்டனில் பல இடங்களில் தாக்குதல் ; இதுவரை ஒருவார் பலி-பலர் காயம்



லண்டன் பிரிட்ஜ், பரோ மார்க்கட் மற்றும் வாக்ஸ்ஸால் பகுதியில் தாக்குதல்கள் (மூன்று சம்பவங்கள்) - லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையம் மூடப்பட்டது..

லண்டனின் மத்திய பகுதியில் லண்டன் பிரிட்ஜில் நடைபாதையில் சென்றவர்கள் மீது வான் ஒன்று மோதியதாக போலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபாதையில் வந்தவர்கள் மீது வான் மோதியதாக வந்த செய்தியை அடுத்து சம்பவ இடத்தில் ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் காணப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பாலம் இரு பக்கமாகவும் மூடப்பட்டுள்ளதாக லண்டனுக்கான போக்குவரத்துப் பிரிவு கூறியுள்ளது.

அந்த சம்பவம் நடந்தபோது அந்த பாலத்தில் இருந்த செய்தியாளர் , ஒரு நபரால் செலுத்தப்பட்ட அந்த வான் மணிக்கு சுமார் 50 மைல் வேகத்தில் ஓடியதாக தெரிவித்துள்ளார்.

அது பலரை இடித்ததை தான் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் சிகிச்சையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதையடுத்து அருகே பரோ மார்க்கட் பகுதியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பரோ மார்க்கட்டில் உணவு விடுதி மற்றும் மதுச் சாலையில் கத்திக்குத்து குறித்த முறைப்பாடு கிடைத்ததை அடுத்து தாம் பதில் நடவடிக்கை எடுத்ததாகவும், அங்கு துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாகவும் போலிஸார் கூறியுள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கட் சம்பவங்களை விட தெற்கு லண்டனின்  வாக்ஸ்ஸால் பகுதியிலும் ஒரு சம்பவம் நடந்ததாக போலிஸார் கூறியுள்ளனர்.

ஆனால், இந்த மூன்றாவது சம்பவம் முதல் இரு சம்பவங்களுடன் தொடர்புடையதா என்று தெரியவில்லை என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் சம்பவத்தை அடுத்து லண்டன் பிரிட்ஜ் ரயில்நிலையம் மூடப்பட்டதாக தற்போது வரும் செய்திகள் கூறுகின்றன.

பாலம் மூடப்பட்டு போக்குவரத்து திசைதிருப்பிவிடப்படுகின்றது.
வான் மோதியதில் பலர் காயமடைந்ததாகவும், சம்பவம் குறித்து பிரதமருக்கு உடனுக்கு உடன் தகவல் தரப்படுவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.இதற்கிடையே இந்தச் சம்பவங்களில் ஒன்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் பல இடங்களில் தாக்குதல் ; இதுவரை ஒருவார் பலி-பலர் காயம் லண்டனில்  பல இடங்களில் தாக்குதல் ; இதுவரை ஒருவார் பலி-பலர் காயம் Reviewed by Madawala News on 6/04/2017 05:17:00 AM Rating: 5