Kidny

Kidny

இன்றைய மின்பர் மேடை: சிந்தனைக்கு சில கருத்துகள்!


ஜெம்ஸித் அஸீஸ்

மின்பர் மேடை மிகப் பெரும் ஊடக மேடை.

அழைப்பிதழ் இல்லை. துண்டுப் பிரசுரம் இல்லை.

ஞாபகமூட்டல் (றிமைன்டர்) இல்லை.

அழைப்பொலி (அதான்) மாத்திரம்தான்.

வந்து குவிந்து விடுவார்கள்.

அதற்கு முன்னரே வந்தமர்ந்து விடுபவர்களும் ஏராளம்.

ஆசையோடும் ஆர்வத்தோடும் வருபவர்களே அதிகம்.

குத்பா பிரசங்கங்களும் முன்னரை விட இப்போது முன்னேற்றம்தான், அல்ஹம்துலில்லாஹ்!

ஆனாலும், சில… சிலபோது பல கதீப்மார் ஏன் இன்னும் உணர்ந்து கொள்கிறார்களில்லை?

வேதனையாகவே இருக்கிறது.

உரத்துக் குரல் எழுப்பும் அளவுக்கு விடயதானம் போதுமாக இல்லை.

போதிய தயார் நிலை இல்லை.

நேரத்துக்குள் முடிப்பதற்கும் தயாரில்லை.

தேவைக்கதிகமாக அடித் தொண்டையினால் குரலெழுப்ப வேண்டிய தேவையுமில்லை.

அப்படி குரலெழுப்புவதனால் சொல்ல வரும் செய்தியும் தெளிவாக விளங்குவதில்லை.

இன்று அப்படியொரு அனுபவம்தான்.

பல முறை ஜம்இய்யதுல் உலமா இது குறித்த வழிகாட்டல்களை வழங்கி விட்டது.

ஆலோசனைகளை முன்வைத்து வலியுறுத்தி விட்டது.

அது பற்றிய கருத்தரங்குகளும் நடந்து வருகின்றன.

ஆனாலும், சில… சிலபோது பல கதீப்மார்கள் அவற்றையெல்லாம் சற்றேனும் செவியேற்றிருப்பதாக தெரியவில்லை.

அத்தகைய கதீப்மார்களே! வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு கிடைக்காத அரிய சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

தயவுசெய்து கொஞ்சம் சிந்தியுங்கள்.


தயாராகுங்கள்…

பயிற்சியெடுங்கள்…

ஆலிம்களின் வினைத்திறன்மிக்க குத்பாக்களை செவிமடுங்கள்…

மின்பர் மேடைகளை மேலும் மெருகூட்டுங்கள்…


குத்பாக்கள் வெறும் காரமாகவோ கசப்பாகவோ உறைப்பாகவோ உவராகவோ இருந்து விடக் கூடாது.


இனிப்பாகவும் இருக்க வேண்டும். அழகிய மொழியில் இதமாகவும் இருக்க வேண்டும்.


அப்படியானால், இனிப்புப் பதார்த்தத்தை தேடி வந்து ஒட்டிக் கொள்ளும் எறும்புகள் போல் மக்கள் உங்கள் குத்பாக்களில் லயித்து விடுவார்கள்.


இனி, மின்பர் மேடைகள் இனிக்கட்டும்!


இன்றைய மின்பர் மேடை: சிந்தனைக்கு சில கருத்துகள்! இன்றைய மின்பர் மேடை: சிந்தனைக்கு சில கருத்துகள்! Reviewed by Madawala News on 6/16/2017 06:06:00 PM Rating: 5