tg travels

மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு ..


களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பாடுபட்ட பேருவளை மருதானை பிரதேச மக்களை கெளரவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. 


இவ்வுணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று தராவீஹ் தொழுகையை தொடர்ந்து பேருவளை மருதானையில் நடைபெற்றது. இவ் உணவு பொதிகள் அமைச்சரின் களுத்துறை மாவட்ட இணைப்பாளரும், களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸீப் மரிக்கார் அவர்களினால் கையளித்துவைக்கப்பட்டது. 


நாட்டின் எப்பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் எற்பட்டாலும் உயிரைக் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபடுபவர்கள் பேருவளை மருதானை மக்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு .. மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு .. Reviewed by Madawala News on 6/16/2017 02:55:00 PM Rating: 5