Yahya

ஞானசார வெளிநாட்டு ஏஜண்டாம்...! காலம் கடந்த ஞானம் ..


இந்த ஞானசார வெளிநாட்டு ஏஜண்டாகத்தான் செயல்படுகின்றார் என்ற உண்மையை நாங்கள் ஏற்கனவே பல கட்டுரைகள் மூலம் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அப்போதெல்லாம் கடும் விமர்சனங்களையும் நாங்கள் சந்திதிருந்தோம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலிப் பயங்கரவாதம் அடக்கப்பட்ட விதம் அவர்களுக்கு பிடித்திருக்கவில்லை,

அதே நேரம் 2009ம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் தூண்டுதலோடு மனித உரிமைகள் அமைப்பு ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டுவந்த போது, அதனை முஸ்லிம் நாடுகளின் ஆதரவோடு நான்கு வாக்குகளினால் மஹிந்தவால் வெற்றிகொள்ளப்பட்டது.

இந்த விடயம் அமெரிக்கா என்ற ஆழுமைக்கு கிடைத்த பாரிய அடியாகத்தான் அன்று இருந்தது, இதில் ஒரு வேடிக்கை என்வென்றால் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான குவைத் நாடுகூட மஹிந்தவின் பக்கம் நின்று வாக்களித்ததுதான்.

அடுத்த விடயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு தலைகுனியாமல் முஸ்லிம்  நாடுகளின் உதவியை பெற்று இலங்கை நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்சென்ற விடயமாகும்.

பலஸ்தீன் விடயத்திலும் சிறிய நாடாக இலங்கை இருந்தும் தைரியமாக அமெரிக்காவையும், இஸ்ரவேலையும் எதிர்த்தது மட்டுமல்ல, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஐ.நா சபையிலும் பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையுமாகும்.

இப்படியான அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை தைரியமாக எதிர்கொண்டுவந்த மஹிந்த அரசாங்கத்தை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற என்னம் டயஸ்போராக்களுக்கும், மேற்குலகத்துக்கும் ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை எனலாம்.

அதன் காரணமாக ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை நிறுத்தினார்கள், அதன் பின் மீன்பிடி ஏற்றுமதி விடயத்தில் கட்டுப்பாடு விதித்தார்கள், அதையெல்லாம் தாண்டி மஹிந்த ஆட்சியை கொண்டு சென்றபோதுதான், அமெரிக்கா ஈராக், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் உள்ளூர் குழப்பங்களை ஏற்படுத்தி எப்படி அங்கே ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்தினார்களோ அதே போன்று இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள்.

தமிழர்கள் புலியை அடக்கிய விடயத்தில் மஹிந்தவோடு கடும் கோபத்தில் இருந்தார்கள், ஆனால் முஸ்லிம்கள் மட்டும் யாருக்கும் ஆதரவு இல்லாமல் நடு நிலை வகித்து வந்தார்கள், அப்படிப்பட்டவர்களை ஞானசாரவைப் போன்றவர்களை பயன் படுத்தி பந்திக்கு இழுத்தால் முஸ்லிம்களும்  மஹிந்த ஆட்சியை வெறுப்பார்கள் அதனால் மஹிந்தவை வீழ்த்துவது இலேசாக இருக்கும் என்ற நோக்கத்துக்கு  செயல்படுத்தப்பட்ட கூலிப்படையே இந்த ஞானசார என்பவராவார்.

இந்த ஞானசாராவின் செயல்பாட்டை அறிந்திருக்காத மஹிந்த, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதெல்லாம் சம்பிக்க ரணவக்க போன்றோரின் எச்சரிக்கையினால் தடுக்கப்பட்டார்.

மஹிந்தவை வீழ்த்துவதற்கு சந்திரிக்கா தலைமையில் ரணில், மங்கல, பொன்சேகா, ராஜித, மைத்திரி போன்றோர் ஏற்கனவே திட்டம் தீட்டி செயல்பட்ட விடயத்தை மஹிந்த அறிந்து கொள்ளாத விடயம்தான் மிகப்பெரிய ஆச்சரியமாகும்.

மஹிந்தவோடு கூட இருந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு அடுத்தநாள் மஹிந்தவுக்கு எதிராக மைத்திரி களம் இறங்கிய விடயம் திடீர் என நடந்த விடயம் ஒன்று அல்ல.
பல நாட்கள் ரகசியமாக திட்டம் தீட்டி நடத்தப்பட்ட நாடகமே அதுவாகும்.அதனை சந்திரிக்கா அம்மையார் கூட பல மேடைப்பேச்சிக்களில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இன்று கூட ஞானசாராவை இந்த அரசாங்கம் எதிர்க்காமல் இருப்பதற்கு காரணமே, ஞானசாரா பல உண்மைகளை வெளியிட்டு விடுவார் என்ற பயமேதான்.

ஆகவே மஹிந்தவை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிதான் இந்த ஞானசார என்பவர், அதற்கு   முஸ்லிம் சமூகம் பழியானது என்பதே உண்மையாகும்.

இருந்தாலும் ஞானசார ஏன் இன்றும் முஸ்லிம்களை சீண்டுகின்றார் என்ற கேள்வியும்  எழலாம்.

அதற்கு ஞானசார பொறுப்பு அல்ல, மேற்குலகமும் இஸ்ரேலுமே காரணமாகும். 

ஞான சார கட்டளைகளை நிறைவேற்றும் ஒருவரே தவிர அதன் விளைவுகள் என்னவென்று அவருக்கு தேவையில்லை (அவருக்கு தேவையானது பணம் மட்டுமே,) மஹிந்தவை வீழ்த்தியாகி விட்டது அதற்கு அப்புறம் முஸ்லிம்களை பந்திக்கு இழுத்து அவர்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்துவிட்டால், அதனை சாட்டாக வைத்து அந்த சமூகத்தை பல வழிகளிலும் மட்டம் தட்டிவிடலாம் என்ற மேற்குலகின் திட்டமும் இருக்கலாம்.

ஆகவே இந்த உண்மையான விடயங்களை இன்று முஜிவுர் ரஃமான், அசாத்சாலி, மரைக்கார் போன்றோர் பகிரங்கமாக கூறுமளவுக்கு நிலைமை வந்துள்ளது.

ஞானசாரவுக்கு பின்னால் இருப்பது வேறொரு சக்தி என்ற விடயம் இவர்களுக்கு இப்போதுதான் புரிகின்றது. மஹிந்த கூட அன்று பத்திரிகையாளர்கள் முன் கூறியிருந்தார் இந்த ஞானசார போன்றோர் அடிக்கடி அமெரிக்காவுக்கும், நோர்வேயிக்கும் சென்று வந்ததை நான் கவணியாது விட்டு விட்டேன் அதுதான் நான் செய்த மாபெரிய தவறு என்றும் கூறியிருந்தார். 

அது மட்டுமல்ல சம்பிக்க ரணவக்க போன்றோர் திட்டமிட்டுத்தான் இந்த ஞானசாராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்திருந்தார்.இப்போது இந்த சம்பிக்க ரணவக்க எங்கே இருக்கின்றார் என்று முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆகவே, இந்த உண்மைகளை அலசி ஆராய்ந்து பார்த்தோமேயானால் இங்கே என்ன நடக்கின்றது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.
அப்படி அறிந்து கெள்ள முற்படாமல் முஸ்லிம் சமூகம் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு நிற்குமேயானால், பேரழிவு நமது சமூகத்துக்குத்தான்...!

எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை...
ஞானசார வெளிநாட்டு ஏஜண்டாம்...! காலம் கடந்த ஞானம் .. ஞானசார வெளிநாட்டு ஏஜண்டாம்...! காலம் கடந்த ஞானம் .. Reviewed by Madawala News on 6/05/2017 03:10:00 PM Rating: 5