tg travels

பள்ளிவாசல்களை தாக்குவது தீவிரவாத செயல்..



ARA FAREEL 

முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளையும், வர்த்­தக நிலை­யங்­க­ளையும் தாக்­கு­வது தீவி­ர­வாதச் செய­லாகும். அர­சாங்கம் இவ்­வா­றான தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உடன் நட­வ­டிக்கை எடுக்­கா­த­தி­னா­லேயே தாக்­கு­தல்கள் தொடர்ந்­தன.


 நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்றால் அனைத்து இனங்­க­ளையும் மதங்­க­ளையும் சம­மாகக் கருத வேண்டும் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். 


கொழும்பு என்.எம்.பெரேரா ஞாப­கார்த்த நிலை­யத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.


 அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள், வர்த்­தக நிலை­யங்கள் எரி­யூட்டல் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்கள் 14 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளதால் தற்­போது இவ்­வா­றான சம்­ப­வங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் அமைச்­சர்கள் தெரி­வித்­தார்கள்.


 இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்ந்தால் அது எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கும், அபி­வி­ருத்­திக்கும் பெரும் பாதிப்­பாக அமையும். 


சைட்டம் தனியார் மருத்­துவ பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் அர­சாங்கம் நல்­லதோர் தீர்வு காண வேண்டும். பணத்­துக்­காக மருத்­துவப் பட்டம் வழங்கும் முறை இல்­லாமற் செய்­யப்­பட வேண்டும். 


க.பொ.த(உ/த) பரீட்­சையில் விஞ்­ஞானப் பிரிவில் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்றுக் கொள்ளும் மாண­வர்­களே வைத்­திய துறைக்குப் பொருத்­த­மா­ன­வர்கள். சித்தி பெறாத மாண­வர்கள் பணத்­தினால் வைத்­தியர் பட்­டத்தை பெற்­றுக்­கொள்­ளும்­முறை தவ­றா­ன­தாகும். 


இதேவேளை வைத்தியத்துறைக்கு தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் அரச பல்கலைக்கழகங்களில் இடமளிக்கும் வகையில் அதற்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்றார்

பள்ளிவாசல்களை தாக்குவது தீவிரவாத செயல்.. பள்ளிவாசல்களை தாக்குவது தீவிரவாத செயல்.. Reviewed by Madawala News on 6/28/2017 11:39:00 AM Rating: 5