Ad Space Available here

பஸீர் மாஸ்டரின் சீடி சுவிஸ் வங்கி லொக்கரில் ..


சுவிஸ் ஹாரிசுடனான உரையாடல் - 01
ஜெ.எல்.எம்.ஏ. ஷாஜஹான், காத்தான்குடி

ஸ்ரீலங்கா முஸ்லிம் குரலுக்கு ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செயலாளரும், முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான சுவிஸ் ஹாரிஸ் அவர்களுடனான உரையாடல்

பஸீர் சேகுதாவூதின் முக்கிய ஆறு நண்பர்களில் ஒருவர் சுவிஸிலிருந்து இலங்கை வந்துள்ளார். இவர் பஸீர் சேகுதாவூதின் நிழலாக செயற்படுபவரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பிருமான ஏ.யூ.எல்.எம். ஹாரீஸ் என்பவராகும். பஸீருக்குத் தெரிந்த இரகசியங்கள் இவருக்கும் தெரியும், நியாயமான காரணங்களுக்காக பஸீர் சேகுதாவூத் அவர்களையும் பலமுறையாக எதிர்த்து செயல்பட்டுள்ளார். சீடி விடயமாக அவரிடம் உரையாடியபோது சீடி டி.எச்.எல்.இல் தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தாகவும், தனது சுவிஸ் வங்கி லொக்கரில் வைக்கும்படியும் கேட்டிருந்தார். அவருடைய வங்கி லொக்கர் சாவி தன்னிடம் உள்ளதாகவும், சீடி வெளியீட்டிற்கு தான் பலமான எதிர்ப்பை தெரிவித்தாகவும் தெரிவித்தார். மேலும் உலமாசபைக்கு சமர்ப்பித்து அவர்களின் ஆலோசணைக்கு ஏற்ப செயற்படுமாறு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். 

சுவிஸ் வங்கி லொக்கர் பஸீர் அவர்களுக்கு எப்படி சாத்தியமானது என வினவியபோது, இலங்கையிலுள்ள பெரிய செல்வந்தர்களுக்கு மாத்திரமே சுவிஸ் வங்கி லொக்கரை எடுப்பது சாத்தியம் என்றால், பஸீர் மாஸ்டருக்கும் சாத்தியமான விடயம்தான் எனவும் கூறினார். பஸீர் மாஸ்டர் சர்வதேச அமைப்புக்களுடன் தொடர்புபட்டுள்ளவர். அவருடைய ஆலோசணைக்காக டயஸ்போராவே காத்துக்கிடக்கும். கிழக்கு முஸ்லிம் சமூகம் இனி இவரை பயன்படுத்துவார்கள் என நினைக்கின்றேன். ஈரோஸ் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும், தற்போது பஸீர் சேகு தாவூதின் நிலழாக செயற்படுபவருமான யுருடுஆ. ஹாரீஸ் அவர்களுடனான 05மணி நேர சமகால அரசியல், முஸ்லிம் காங்கிரஸின் சீடி விவகாரம் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. சமகால அரசியலில் இவ்விடயம் முக்கியத்துவம் பெறும் என்ற காரணத்தினால் தொடர்ச்சியாக வழங்குவோம்.

பஸீர் சேகு தாவூத் அவர்களிடம் இருக்கின்ற சீடியில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் யார்? யார்? இருக்கின்றார்கள் என வினவியபோது எனக்கு இது சம்பந்தமான பூரணமாகத் தெரியாது. ஆனால் சீடி இரண்டு வகையில் உள்ளது என நினைக்கின்றேன். 

முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் மதுபானம் அருந்துவதும், பெண்களுடன் இருப்பது மான காட்சிகள் கொண்டதாக சீடி இருக்குமென நினைக்கின்றேன். நான் நாட்டிற்கு வருவதற்கு ஒருநாள் முன்தாகத்தான் எனக்கு சீடி கிடைத்தது. நாடு வருவதற்காக இருந்ததால் அவசர வேலைகள் காரணமாக நான் இதைப் பார்க்கவில்லை. அதை நான் சுவிஸ் வங்கியின் லொக்கரில் வைத்துவிட்டு வந்தேன். சீடி என்பதை விட நிறையவே தலைவர் ஹக்கீம் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், பஸீர் மாஸ்டருக்கு, பாதிக்கப்பட்ட தாங்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு எழுதிய கடிதங்களைப் பார்த்திருக்கின்றேன். அக் கடிதங்கள் ஒலுவில், பாலமுனை, மருதமுனை, கொழும்பு, மூதூர் உட்பட பல பிரதேசங்களுடையவர்களுடையதாக இருந்தன. 

04வருடங்களுக்கு முன் நான் இலங்கை வந்தபோது பஸீர் மாஸ்டரின் வீட்டில்தான் தங்கியிருந்தேன். ஒருமுறை அதிகாலை 05மணியிருக்கும் எங்கள்; இயக்க போராட்ட காலத்தில் ராணி தாத்தா என அன்பாக அழைக்கப்படும் (பஸீர் மாஸ்டரின் மனைவி) பஸீர் மாஸ்டர் கடிதம் ஒன்றைக் கொடுத்து, ஹக்கீம் வேலையைப் பாருங்கள் எனக் கூறினார். அவர் சிறிதளவு படித்துவிட்டு என்னால் படிக்க முடியாதுள்ளது நீங்கள் படியுங்கள் என்று என்னிடம் கூறி தேனீர் தயாரிக்கப் போய்விட்டார். அவ்வளவு ஆபாசம் நிறைந்த கடிதமாக விருந்தது. 

அக்கடிதம் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடையது என நினைக்கின்றேன். பஸீர் மாஸ்டருக்கு ஹக்கிமிடம் இருந்த அதிக உறவின் காரணமாக நிவாரணத்தைப் பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் பஸீர் மாஸ்டருக்கு கடிதம் எழுதிருந்தார்கள். அவைகளை ஒரு கோவையாக நிறைய வைத்திருக் கின்றார். பஸீர் மாஸ்டர் இவைகளைத் தேடிச்சென்று எடுக்கவில்லை. அந்த கடிதத்தை வெளியிட்டால் நிறையக் குடும்பங்களுக்குள் பிரச்சனை வரும்  என்ற காரணத்தினால் அப்படியான கீழ்த்தரமான வேலைகளை பஸீர் மாஸ்டர் செய்ய மாட்டார். அவர் ஒரு ஆயுதப் போராளி, இடதுசாரிச் சிந்தனையுள்ளவர். முஸ்லிம் காங்கிரிஸில் சென்றதால்தான் முதலாளித்துவ சிந்தனையில் ஆட்பட்டுள்ளார் என நினைக் கின்றேன். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு போராளி முஸ்லிம்களுக்கு சுதந்திர நிலம் இருக்கவேண்டுமென்று நினைக்கின்றவர். 

கேள்வி:
சீடி விடயத்தை தற்போது கையிலெடுக்க வேண்டிய அவசியம் பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு ஏன் வந்தது? தேசிய பட்டியல் கொடுக்கப்படவில்லையென்ற காரணமா?

பதில்:
இதைப் பற்றி எனது கருத்தை சொல்வதற்கு முன் பஸீர்; மாஸ்டரின் போராட்ட காலத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒன்றை சொல்வதன் மூலம் சீடி விடயத்தை கையிலெடுத்ததை சரி கானலாம் என நினைக்கின்றேன் இந்தியா படைகள் நிலை கொண்டிருந்த காலம் ஈரோஸ் தோழர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தால் வேட்டையாடப்பட்டுக் கொன்டிருந்தார்கள். பஸீர் மாஸ்டரும் ஈரோஸ் முக்கிய தளபதிகளும் உயிர் அச்சுருத்தலான நேரத்தில் களத்திலே மக்களுடன் நின்று கொண்டிருந்த வேளையில், ஒரு தமிழ் சகோதரி ஈ.பி.ஆர்.எல்.எப். உருப்பினர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். அந்த சகோதரிக்கு நீதி வேண்டி பஸீர் மாஸ்டர், ஈ.பி.ஆர்.எல்.எப். முகாமுக்கு தனியொருவராக சென்று நீதி கேட்ட சம்பவத்துடன், நான் குமாரிக்கும் ஏனைய பாதிக்கப்பட்டட பெண்களுக்கும் அவர் நீதி கேட்டதையும் ஒப்பிட்டு பார்க்கின்றேன்.

ஹக்கீமுக்கும், பஸீர் மாஸ்டருக்கும் இடையில் குமாரி குரே தொடர்பாகவும் ஹக்கீமால் பாதிக்கப்பட்ட ஏனைய பெண்கள் தொடர்பாகவும் சுமார் 3 வருடத்திற்கு முன்பிருந்தே பணிப்போர் தொடங்கி விட்டதை என்னிடம் சுவிஸ் வந்திருந்த போது பஸீர் மாஸ்டர் தெரிவித்திருந்தார். ஹக்கீமும் அந்த நேரம் சுவிஸ் வந்துயிருந்தார். இனப்பிரச்சினை தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் அங்கு வந்திருந்தார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்தாலும். ஹக்கீமினால் பாதிக்கப்பட்ட பெண்கஞக்கு ஒரு நாளும் தீர்வு வராது என்று பஸீர் மாஸ்டர் நகைச்சுவையாக கூறினார்

பாதிக்கப்பட்;ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற் காகவே சீடி விடயத்தை கையிலெடுத்திருந்தார். பஸீர் மாஸ்டர் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தவுடன் பஸீர் மாஸ்டரை கட்சியிலிருந்து ஓரம் கட்டும் முடிவை ஹக்கீம் கையில் எடுத்திருந்தார். அதற்காகவே முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள் 80பேருக்கு மேற்பட்டவர்களை சந்தித்தார். கட்சிக்கு எவ்வளவு அநியாயம் செய்த நஸீர் ஹாபிஸை கட்சிக்குள் உள் வாங்கினார். இருந்தும் பஸீர் மாஸ்டர் கட்சிக்குள் போராடிக் கொண்டிருந்தார். கட்சிக்குள் போராட முடியாத போது மக்களிடம் நேரடியாக சொல்ல முடிவெடுத்தார். முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் இவ்வளவு காலமும் ஏன் சொல்லவில்லையென்று கேட்கின்றனர். மூன்று வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தால் ஏன் இவ்வளவு அவசரப்பட்டு இதைச் சொல்கின்றார், கட்சிக்குள் தீர்வு கண்டிருக்கலாமே என சொல்லியிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸில் பஸீர் மாஸ்டர் இணைந்தது பொறுத்தமில்லையென்று முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு முன் கூறியிருந்தேன். முஸ்லிம் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் ஈரோஸ் முஸ்லிம் தோழருக்கு ஒருமித்த கருத்து இருந்து. எப்படி தமிழ் மக்களுக்கு புலிகள் தீர்வைப் பெற்றுத்தராது என்று எப்படி நம்பியிருந்தோமோ அதே போன்று முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தராது என நம்பினோம். இதுவரையில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான தீர்வை முன்வைக்கவில்லை.

கடந்த காலங்களில் தேசியப்பட்டியல் பஸீர் மாஸ்டருக்கு கட்சியின் தீர்மானப்படி கொடுத்திருந்தார்கள். 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றர். சென்ற முறை நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். 

ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கப்பட்டார். ஹசனலிக்கும் இதுதான் நடந்தது. இவ்வாறு கட்சிக்குள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படும் போது மானமுள்ள எந்த மகனும் சும்மா பார்த்துக் கொண்டிருக்கமாட்டான். அதனால் தான் இப்போது பஸீர் மாஸ்டர் விஸ்பரூபம் எடுத்துள்ளார். இதன் முடிவு முஸ்லிம் சமூகத்திற்கு நன்மையானதாக இருக்கும். இன்னொரு விடயத்தை பஸீர் மாஸ்டர் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு அமைப்பை கட்சியை மக்கள் மத்தில் கட்nடியழுப்புவது சம்பந்தமாகவும் ஒரு கட்சியை எப்படி மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி அழிப்பது சம்பந்தமாகவும் விசேட பயிற்சியை ஈரோஸ் அமைப்பின் காலத்திலேயே பெற்றுக் கொண்டவர் என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை எதிர்காலத்தில் கையாள்வார் என நினைக்கின்றேன்.                        

கேள்வி:
ஈரோஸில் பஸீர் சேகு தாவூத் இருந்த காலத்தில் முஸ்லிம், காங்கிரஸ் போராளிகளை துன்புறுத்தியுள்ளதாக ஒரு கதை சொல்லப்படுகின்றது பற்றியும் 'நீங்களும் ஈரோஸில் இருந்தவர் என்ற வகையில் இதைப் பற்றி என்ன சொல்லமுடியும்.?,

பதில்:
ஈரோஸ் அமைப்பில் அரசியல், இராணுவம் என இரண்டு பிரிவுகள் இருந்தது. பஸீர் மாஸ்டர் ஈரோஸ் அமைப்பின் பொதுக்குழு (GC) உறுப்பினராக அரசியல் பிரிவில் இருந்தார். இச்சந்தர்ப்பத்திலேயே காத்தான்குடியில் மிக அறியப்பட்ட, புத்திஜீவியான கபூர் மாஸ்டரும் ஈரோஸின் வெளி விவகாரப் பிரிவின் ஆலோசகராக கடமை யாற்றினார். நான் மாவட்ட குழு உறுப்பினராக அரசியல் பிரிவிலேயே இருந்தேன். ஒவ்வொரு பிரதேசத்திற்கு ஒரு அரசியல் பொறுப்பாளரும், ஒரு இராணுவப் பொறுப்பாளரும் கடமையாற்றினார்கள். பஸீர் மாஸ்டர் சொந்த ஊடாரான ஏறாவூரில் கடமையாற்றவில்லை. ஏறாவூரின் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் தோழர்கள் ஈரோஸில் இணைந்திருந்தனர். முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பிக்கப்பட்ட நேரம் ஈரோஸ் முஸ்லிம் தோழர்கள் அரசியல் சிந்தனையில் உச்சக், கட்டத்தில் இருந்தனர். இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக இந்தியப்படை நிலை, கொண்டிருந்த நேரம் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் இயக்கம் தேவை என அங்கீகரித்த ஒரே இயக்கம் ஈரோஸ்
 மட்டுமே. 

அந்த அங்கீகாரத்தை பஸீர் மாஸ்டர் இந்தியப்படை தளபதி தார் தலைமையில்மட்டக்களப்பு வாடி வீட்டில் நடைபெற்ற சகல இயங்களுடான சந்திப்பில் வைத்து  பிரகடனம் செய்தார். அது வீரகேசரி பத்திரிகையில் மறுநாள் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரகடனத்தை பஸீர் மாஸ்டர் வெளியிட்டு ஒரு வாரத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடியில் அங்குரார்ப்பனம் செய்யும் 1வது கூட்டம் பரீனாஸ் தோட்டத்தில் நடைபெற்றது. 

இதில் நானும், காங்கேயனோடையை சேர்ந்த ஈரோஸ் தோழர்கலான இஸ்மாயில்> நயீம் ஆகியோருடன் பங்குபற்றினேன் இதில் தான் நண்பர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் தலைவர் அஷ்ரப் அவர்கர்கள்என்னிடம் ஈரோஸ் முஸ்லிம் காங்கிரஸை அங்கீகரித்ருக்கின்றது. LTTE ஏன் அங்கீகரிக்கவில்லை என கேட்டார். இதற்கு காத்தான்குடியைச் சேர்ந்த அமீர் அலி> மன்சூர் BA எல்லோரும் சாட்சிகளாவர். இந்தக் கலந்துரையடலில் அரசியல்/, கருத்துக்களை முன்வைத்து நானும் அதிபர் உதுமாலெப்பை, BA அவர்களுமே விவாதித்தோம். காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் வரலாறு எழுதப்படும் போது இந்த 1வது கூட்டமும் பதிவு ,செய்யப்படும் என்று நினைக்கின்றேன் 


முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்குத் தேவை என்று சொன்ன பஸீர் மாஸ்டர் எப்படி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை அச்சுறுத்தினார் என்று சொல்கின்றார்கள் என எனக்கு, விளங்கவில்லை. இது ஒரு திட்டமிட்ட ஏறாவூர் முஸ்லிம் புலிகளின் பொய்ப் பிரச்சாரமாகும். ஏறாவூர் முஸ்லிம் புலிகள் அனைவரும் அலி சாஹிர் மௌலானாவின் ஆதரவாளர்களானதும், இப்போதும் பழைய புலிகள் அனைவரும் மௌலானாவின் ஆதரவாளர்களே. ஏறாவூரில் பஸீர் மாஸ்டருக்கு எதிரான போக்கு தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஏறாவூர் அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரியும். ஏனெனில் பஸீர் மாஸ்டர் மர்ஹும் பரீட், மீராலெவ்வை அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதாகும். 
(தொடரும்)
பஸீர் மாஸ்டரின் சீடி சுவிஸ் வங்கி லொக்கரில் .. பஸீர் மாஸ்டரின் சீடி சுவிஸ் வங்கி லொக்கரில் .. Reviewed by Madawala News on 6/06/2017 07:58:00 PM Rating: 5