tg travels

உண்மையான எதிரிகள் யார் ?இனகான தவறும் முஸ்லிம் சமூகம்....!


உரிமைகளைப் பெற்றுத்தருவோம், உங்களுக்காக குரல் கொடுப்போம், சமூகத்துக்காக இரவு பகலாக பாடுபடுவோம்,யாருக்கும் சோரம் போக மாட்டோம் என்று கூறி வாக்குகளை கொள்ளையடித்து சென்ற நமது அரசியல்வாதிகள் எங்கே....?

அன்று இனங்கிய அரசியல் செய்ததன் மூலம், பிரச்சினைகள் என்று வரும் போது அரச தலைவர்களின் உள்வீட்டுக்குள் சென்று நியாயத்தை எடுத்துக்கூறி தீர்வை பெற்றுத்தந்த அந்த தலைவர்களை நிராகாரித்து விட்டு, தனித்துவமாக இயங்கி அதைவிட வேகமாக பிரச்சினைகளை தீர்த்து தறுவோம் என்று கூறி வாக்குகளை கொள்ளையடித்து சென்ற நமது தனித்துவம் பேசிய அரசியல்வாதிகள் எங்கே.?

அன்று உள்வீட்டு பிள்ளைகளாக இருந்து கொண்டு நூறுவீதம் தீர்வை பெற்றுத்தர முடியாது விட்டாலும், இனங்கிய அரசியல் மூலம் ஓரளவுக்கேனும் பிரச்சினைகளை தீர்த்து வைத்த அந்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு, வீதியிலே நின்று நியாயம் கேட்கும் ஊரான் வீட்டுப்பிள்ளை போன்று இருப்பவர்களை தெறிவு செய்ததன் விளைவுகளே இன்று நாம் அனுபவிக்கும் சோதனைகளாகும்.

சிங்கள பகுதிகளிலே வாழும் முஸ்லிம் மக்கள் சிங்கள பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் பல பிரச்சினைக்கு அன்று முற்றுப்புள்ளி வைத்து வந்தார்கள்.

அப்படி வாக்களித்து சிங்கள அரசியல்வாதிகளின் அன்பிலும் பாதுகாப்பிலும் இருந்த வந்த மக்களை, 

இனவாதம் பேசி முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு வாக்களியுங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக நாங்களிருப்போம் என்று கூறி அந்த மக்களை மூலைச்சலவை செய்து வாக்குகளை பெற்றுச்சென்ற நமது அரசியல்வாதிகள், இன்று பிரச்சினைகள் என்று வரும் போது அதற்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடிஒழிந்து கொள்கின்றார்களே ஏன்..?

அந்தப் பகுதி சிங்கள அரசியல்வாதிகள் கூட இந்த நேரத்தில் முஸ்லிம்களை பாதுகாக்க பின்னடிக்கின்றார்கள், காரணம் அவர்களுக்கு இவர்களின் வாக்குகள் தேவையில்லை என்பதனால், அல்லது இவர்களுக்கு நாம் உதவி செய்தாலும் தேர்தல் காலங்களில் நமக்கு இவர்கள் வாக்கு போட மாட்டார்கள் என்ற என்னத்தினாலும் அவர்கள் இந்த விடயத்தில் அலட்சியப்போக்கை கடைப்பிடிக்கின்றார்கள்.

இப்படியான விடயங்கள் நமது முஸ்லிம் சமூகத்துக்கு இன்று கூர் கத்தியாக பிடரியில் பாய்கின்றது என்றவிடயத்தை நமது சமூகம் புரிந்து கொள்ளமறுக்கின்றது.

இன்ற நமது அரசியல்வாதிகள் பட்டத்துக்கும் பதவிக்கும் சோரம்போய் கிடப்பதன் காரணமாக, இவர்களின் இயலாமையை கண்டு கொண்ட இனவாதிகள் இலேசாச நமது சமூகத்தை சூரையாடி தள்ளுகின்றனர்.

ஒரு வீட்டிலே களவு எடுக்கச் செல்லும் கள்வன் முதலில் அவன் செய்யும்வேலை என்னவென்றால் அங்கே பாதுகாப்புக்காக நிற்கும் நாயை குறிவைப்பதுதான், அந்த நாய்க்கு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் அது பேசாமல் தனது வேலையை பார்க்கும், அதனை பயன்படுத்தி கள்வன் பொருட்களை களவாடிச்செல்வான்.

அதே நேரம் அந்த நாய் அந்த கள்வனின் திட்டமறிந்து அவனுடைய எழும்புத்துண்டுக்கு சோரம் போகாமல் கடமையில் கண்ணாயிருந்தால் நிச்சயமாக கள்வனின் திட்டம் அங்கே பழிக்காது.

அதே போன்றுதான் நமது அரசியல்வாதிகளின் இன்றய நிலைமையுமாகும், இவர்களின் இயலாமைகள்தான் இன்று நமது சமூகம் பாதிப்படைந்து வருகின்றது என்பதை நமது சமூக மக்கள் புரிந்து கொள்ள தவறிவருகின்றார்கள்.

அதனால் நமது சமூக மக்களும் உண்மையான பிரச்சினைகளுக்கு காரணமான மூலவேரை அறிந்துகொள்ளாமல், யாரையோ எதிரிகளாக நினைத்துக்கொண்டு பதறித்தெறிகின்றார்கள்,

இது எப்படி இருக்குதென்றால் (எய்தவன் இருக்க அம்பை நோவதற்கு) சமமான செயளாகும்.

ஆகவே,... நமது அரசியல்வாதிகளின் கடமைகள் என்ன, அவர்களுக்குள்ள அதிகாரங்கள் என்ன, 

அவர்கள் ஏன் செயல்பட முடியாமல் தவிக்கின்றார்கள் போன்ற கேள்விகளுக்கு நாம் விடை கண்டுபிடித்து தீர்வு கணாதவரை நமது சமூகத்தின் நிலை கவலைக்குறியதுதான் என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

உண்மையான எதிரிகள் யார் ?இனகான தவறும் முஸ்லிம் சமூகம்....! உண்மையான எதிரிகள் யார் ?இனகான தவறும் முஸ்லிம் சமூகம்....! Reviewed by Madawala News on 6/10/2017 02:51:00 PM Rating: 5