Kidny

Kidny

விக்னேஸ்வரனுக்கு  எதிரான பிரேரணை ; இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு..


வடக்கு மாகண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக மாகாணசபையில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று கையளிக்கப்பட்டது.


இந்தக் கோரிக்கையில் வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


விக்னேஸ்வரனுக்கு  எதிரான பிரேரணை ; இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு.. விக்னேஸ்வரனுக்கு  எதிரான பிரேரணை ; இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு.. Reviewed by Madawala News on 6/15/2017 01:18:00 PM Rating: 5