Ad Space Available here

காத்திருக்கும் கரங்கள்


எம்.எம்.ஏ.ஸமட்
மனித செயற்பாட்டினால் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுக்க முடிந்தாலும், இயற்கையின் நியதியினால் நிகழும் அனர்த்தங்களை மனிதனால் தடுத்து நிறுத்த முடியாது.வெள்ள அனர்த்தம்  உட்பட  மண்சரிவு, பூகம்பம், சூறாவளி, கடற்கோள், வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் எவ்வாறு ஏற்படும் என்று கூறவோ அல்லது அவ்வாறு ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை தடுக்கவோ மனிதன் சக்தி பெறமாட்டான். அது படைத்த இறைவனின் சக்திக்குட்பட்டது. மனிதனின் கரங்கள் புரிக்கின்ற தீமைகளுக்கான சோதனையாகவே இவ்வாறான அனர்த்தத்கங்கள் படைத்த இறைவன் புறத்திலிருந்து ஏற்படுகிறது என்பதையும் மறுக்கமுடியாது.

எந்தந்தப் பாவங்கள் உலகில் இடம்பெறுமோ அப்பாவங்களுக்கான தண்டனையையும் படைத்த இறைவன் புறத்திலிருந்து ஏற்படுமென நபி (ஸல்) அவர்கள் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் கூறிச்சென்றிருக்கிறார்கள். அந்தவகையில், 'பொதுச் சொத்தை தம் சொந்தப் பொருளைப்போல் ஆக்கிக்கொள்வது, அமானிதத்தைத் தம் பங்கிற்கு கிடைத்த பொருளாக மாற்றிக்கொள்வது , ஏழைகளின் வரியான ஸகாத்தைக் கொடுக்காமல் இருப்பது, ,மார்க்கக் கல்வியை உலக இலாபத்திற்காகக் கற்பது, கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பது, தாயை வேதனைப்படுத்துவது, நண்பனை அனைத்து விடயங்களிலும் நெருக்கமாக்கிக்கொண்டு பெற்ற தந்தையை தூரமாக்கி விடுவது, பள்ளிவாசல்களில் உலகப் பேச்சுக்கள் அதிகமாகி விடுவது, பாவச் செயல்களில் ஈடுபட்டவன் அச்சமூகத்தின் தலைவனாவது, இழிநிலையானவன் முக்கியமானவனாகக் கருதப்படுவது, ஆடாவடித்தனத்திற்குப் பயந்து மனிதனுக்கு மரியாதை செய்வது, ஆடல், பாடல்களில் ஈடுபடும்  பெண்கள், இசைக்கருவிகள் அதிகமாகிவிடுவது, பலவகையான மதுபானங்கள் அருந்தப்படுவது, காலத்தால் பிந்தியவர்கள் முந்தைய  சமுதாயத்தினரைப் பழிப்பது போன்ற நிலமைகள்; காணப்பட்டால்; அனல் காற்றையும் பூமி அதிர்ச்சியையும், பூகம்பத்தையும், மனிதன் உருமாற்றப்படுவதையும் வானத்திலிருந்து கற்றகள் எரியப்படுவதையும் எதிர்பாருங்கள் என நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள். திர்மிதி எனும் ஹதிஸ் கிரந்தத்தில் இக்ஹதிஸ் பதியப்பட்டுள்ளது. பாவங்கள் அதிகரிக்கின்றபோது அதற்குரிய தண்டனைகளும் படைத்தவனிடமிருந்து கிடைக்கப்பெறும் என்பதற்கு மேற்கூறப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் போதனை போதுமானதாகும்.

விபச்சாரமும், வட்டியும், மதுபாவனைiயும், கொலை, கொள்ளை என்ற பஞ்சமா பாதகச் செயல்களும் அதிகரித்துவிட்டன. இன,மத வேறுபாடின்றி பல்வேறு நவீன பெயர்களில் பாவச் செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் ஏற்படுகின்ற சோதனைகளின் வேதனைகளை ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நிகழ்வும் வல்ல இறைவனின் நாட்டப்படியே நடந்தேறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பேரனர்தத்தையும் நோக்க வேணடியுள்ளது. மழை வெள்ளம், மண்சரிவு மற்றும் கடும்காற்றுக் காரணமாக 14 மாவட்டங்கள்pல் ஏற்பட்டுள்ள இவ்வனர்த்தங்கள் வரலாறு காணாத பாதிப்புக்களை எதிர்நோக்கச் செய்துள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரம் வரையில் அனர்த்தங்களினால் 198 நபர் உயிர் இழந்துள்ளதுடன் 97 பேர் காணாமல் போயுள்ளனர். அத்தோடு, ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இன, மத, மொழி, பிரதேச வேறுபாட்டின்றி இந்த இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மனித நேய உதவிகளை எதிர்பார்த்து தங்களது கரங்களை விரித்தபடி காத்திருக்கிறார்கள்

 

ரமழானும் மனித நேயமும்

மனிதனின் கரங்கள் புரிக்கின்ற தீமைகளுக்கான சோதனையாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு உதவும் பொருட்டு மனிதநேயத்துக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டும் வருகின்றன. உதவிகளுக்காக காத்திருக்கும் கரங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது அவசியமாகவுள்ள நிலையில் புனித ரமழான் மாதம்  நம்மை வந்தடைந்திருகிக்கிறது. இவ்வனர்த்தங்களினால் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்கள் நோன்பை நோற்பதிலும்  நோன்பைத் திறப்பதிலும் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களுக்கு உதவ வேண்டியது நமது ஒவ்வொருவரினதும் மனித நோயப் பொறுப்பாகும்.

மனிதனை இறையச்சமுடையவனாக மாற்றி அவனை மறுமை வாழ்வின்  சுபீட்சத்திற்காக தயார்படுத்துவதற்காகவும், ஏனையவர்களுக்கு பயனளிக்கின்ற விதத்தில் மனிநேயம்;  கொண்டவனாக வாழ வைப்பதற்காகவும் பல்வேறு கடமைகளையும் விதிமுறைகளையும் இறைவன் வழங்கியிருக்கிறான்.
 
இவ்வாறு இறைவனால் முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ள ஐம்பெரும் கடமைகளில் புனித நோன்பும் ஒன்று. உலகில் வாழும் ஏறக்குறைய 160 கோடி முஸ்லிம்கள் அவர்கள்; எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களில் நோன்பு  நோற்பதற்கு தகைமை பெற்றவர்கள். அந்நோன்பை நோற்பது அவர்கள் மீது கடமையானது. அக்கடமையை வரம்பு மீறாமல் கடைபிடிப்பதும் அவர்களின் கடமையாகும்.
 
பல கலாசார விழும்பியங்களை கொண்ட பல்லின சமூகங்கள்; மத்தியில் வாழும் இலங்கை முஸ்லிம்களாகி நாம், ரமழானின் கடமைகளை நிறைவேற்றுகின்றபோது,  ரமழானின் புனிதத்தை பாதிக்காத வகையிலும், சகோதர இன மக்கள் மத்தியில் புனித ரமழான்; பற்றியும், இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இறைவழிபாடுகள் குறித்தும் அவர்கள் தப்பபிப்பிராயம் கொள்ளாத வகையிலும், மேற்கொள்வது அதி முக்கியமென்பதை  உணர்வதும் காலத்தின் அவசியமாகவுள்ளது. ஏனெனில் இந்நாடு பேரனர்தத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் நமது செயற்பாடுகளும் மனிதநேயமிக்கதாக அமைய வேண்டும்.
 
இம்மாதம் நன்மைகளை கொள்ளையடித்துக் கொள்ளும் மாதம் என மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இம்மாதத்தில் தர்மம் செய்வதில் நபி (ஸல்) அவர்கள் வேகமாக வீசும் காற்றைப் போன்று செயற்படுவார்கள் என ஹதிஸ்கள் மூலம் அறிய முடிகிறது. அதிளவில் தர்மம் செய்து அதிகளவிலான பலன்களை இம்மாதத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தனது உம்மத்துக்கு வழிகாட்டுவதற்காக நபி அவர்கள் அவ்வாறு தர்மம் செய்வதில் ஆர்வமாகச் செயற்பட்டார்கள் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அத்தோடு, வலது கரத்தினால் கொடுக்கும் தர்மம் இடது கரத்திற்கு தெரியக் கூடாது. அந்தளவு அந்தரங்கமாகச் செய்யப்படும் தர்மமே மிகச் சிறந்தது என்றும் தர்மம் கொடுப்பது தொடர்பில் விபரிக்கப்படுகிறது. இறைவனுக்கு பயந்து நபி வழியில் பலர் நல்ல பல விடயங்களுக்காக தமது செல்வத்தை தர்மம் செய்கையில், நம்மில் சிலர் தங்களது சுய விளம்பரத்திற்காக தர்மம் செய்கிறார்கள். வணக்க வழிபாடுகளைக் கூட விளம்பரங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இப்தார் என்ற வணக்கமானது சமகாலத்தில் சில முஸ்லிம்கள் மத்தியில் விளம்பரத்திற்காகச் செய்யும் ஒரு நிகழ்வாக மாற்றப்பட்டுள்ளது. இவை தவிர்க்கப்படுவது அவசியமாகும்.

அத்தோடு, இந்த இப்தாரின் மூலம் வீண்விரையம் செய்யப்படுவதையும் சில சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிகிறது. விளம்பரத்திற்காக பணமும் உணவும் வீண்விரையம் செய்யப்படுகிறது அல்லது வீண்வரையம் செய்யப்படுவதற்காக விளம்பரம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடுவதில் தவறிருக்காது. 'உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரையம் செய்யாதீர்கள்' என இறைகட்டளை எச்சரித்துக்கொண்டிருக்கையில், இப்தாருக்கு வௌ;வேறு வியாக்கியாணங்கள் கொடுக்கப்பட்டு பல சுவை உணவுகளோடு ஒரு விழாவிக்கு ஒப்பான நிகழ்வு போன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் வரவேற்று மண்டபங்களிலும் இன்னும் பல்வேறு தளங்களிலும் கடந்த காலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று இருக்கின்றன.

இப்தாரும் மாற்றமும்

இப்தார் ஒரு வணக்க வழிபாடு என்பது நம்மில் பலருக்கு மறக்கப்பட்டுவிட்டது. சகவாழ்வு என்ற அடிப்படையில் நோன்பு நோற்காதாவர்களையும் ஒன்றிணைத்து இடம்பெறும் நோன்பு திறத்தல், நோன்பு திறக்க வைத்தல் என்பது ஒரு கலாசார நிகழ்வு என்றதொரு தோற்றப்பாட்டை இந்நாட்டில் வாழும் சகோதர இன மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

கடந்த சில வருடங்களாக நம்மாட்டில் நோன்பு திறக்க வைத்தல் என்பது ஒரு போட்டிக்குரிய விடயமாக   சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மத்தியில் நோக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு ஆடம்பர உணவுகளைக் கொண்டு நோன்பு திறக்கச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரமாண்டமாக இப்தாரை நடாத்த வேண்டும். அதன் மூலம் நமது அமைப்பும், நிறுவனமும், நாமும் பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் புரியப்படும் ஒரு நிகழ்வாக இப்தார் மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதுடன் அவ்வாறானதொரு நோக்கத்துடன் இந்த இப்தார் ஏற்பாடு செய்யப்படுமாயின் இச்செயற்பாடானது எந்த நன்மையையும் பெற்றுக்கொடுக்காது என்பதையும் உரியவர்கள் புரிந்துகொள்வது அவசியமாகவுள்ளது. ஏனெனில், எண்ணத்திற்கே இறைவனிடம் கூலியுள்ளது.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் இப்தார் ;மூலம்; சுய விளம்பரமும் வீண்விரையமுமே அரங்கேற்றப்படுகிறது. இவ்வாறான விளம்பரத்தினாலும் வீண்விரையத்தினாலும் இறை கட்டளையே மறக்கப்படும் நிலை காணப்படுகிறது. ஆடம்பர இப்பதாரின் மூலம் இப்தார் என்ற வணக்கத்தின் நோக்கம்; மாசுபடுத்தப்படுவதையும்; பொதுவாக கடந்த ரமழான் காலங்களில் அவதானிக்க முடிந்தது.

'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழத்தால் நோன்பு திறக்கட்டும். அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானதாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நபி அவர்களின் இக்கூற்றானது நோன்பு திறக்கும்; போது எளிமையான உணவைக் கொண்டு நோன்பு திறக்க வேண்டுமென்பதையும் நோன்பைத் திறக்க வைக்க வேண்டும் என்பதையும் வழியுறுத்துவதை நாம் உணர்;ந்து கொள்ள முடிகிறது.

ஆனால், நம்மர்வர்களில் சிலர்; நோன்பு திறப்பதற்காகவும் திறக்க வைப்பதற்காகவும் பரிமாறும் உணவானது நபி அவர்களின் கூற்றை உதாசீனம் செய்வாதாகவே அமைகிறது. நோன்பு திறக்க வைப்பது நன்மையானது. அதன் பெறுமதி அளவிட முடியாதது. என்றாலும் நோன்பு திறக்க வைக்கப்பதற்காக மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் அதன் நன்மையை இல்லாமல் செய்துவிடுமா? எனச் சிந்திக்கச் செய்கிறது. குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொள்ளும் நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது.

ஓவ்வொரு வருட ரமழானிலும் அமைப்புக்களும், நிறுவனங்களும், தூரகங்களும், அரசியல் பிரமுவர்களும் என பல்வேறு தரப்பினர்களினால் நோன்பாளிகளை நோன்பு திறக்கச் செய்வதற்காக வைக்கப்படும் உணவுகள் ஒரு பெரும் விருந்தாகவே அமைந்து விடுகிறது. இந்த இப்தார்களில்; நோன்பு திறக்க வசதியற்ற ஏழை எளியவர்கள் எத்தனை பேருக்கு உண்மையில் அழைப்பு விடுக்கப்படுகிறது. எத்தனையோ ஏழைகள் நோன்பு நோற்பதற்கும் திறப்பதற்கும் பல சிரமங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவை கருத்திற்கொள்ளப்பட்டு இப்தார் வணக்கமானது இறைவன் விரும்பும், நபி காட்டிய வணக்கமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மாறாக பெறுமைக்கு மாவிடிக்கும் செயலாக மாறக் கூடாது என்பதை வலியுறுத்துவது பொறுத்தமாகும்.

உதவிகளும் காத்திருக்கும் கரங்களும்

ரமழான் மாதத்தின் நோக்கம் மறக்கப்பட்டு சுய விளம்பரத்திற்காகவும் தனிநபர் மற்றும் அமைப்புக்களின் செல்வாக்குகளை பிரபல்யப்படுத்துவதற்;காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் என பல உள்நோக்கங்களைக் கொண்டு கடந்த கால்ரமழான் மாத இப்தார் போன்று இவ்வருட இப்தாரையும் ஏற்பாடு செய்யாது ஆடம்பர இப்தாருகளுக்காகச் செலவளிக்கப்படுகின்ற ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான பணத்தினை வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டு சகலவற்றையும் இழந்த நிலையில் தங்களுக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு கரங்களை விரித்துக் காத்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு ; முன் வர வேண்டும்.

வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டு நிம்மதியாக உறங்குவதற்குக் கூட முடியாத நிலையில் மக்கள் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில குடும்பத்தினர் உறவுகளைப் பலிகொடுத்திருக்கிறார்கள், சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். மக்களின் சமூகக் கட்டமைப்புக்களும் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அத்தனையும் இழந்து எதிர்காலமே கேள்விக்குறியானதொரு நிலையில,; மக்கள் துயரத்தோடும், வேதனையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் வீண்விரைத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள்  தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.

தங்களின் பணங்கள் ஏழைகளின் வாழ்வு ஒளிபெறவும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழும் மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படுவதற்கும் பயன்பட வேண்டும்.  அவர்கள் மீண்டும் எழுவதற்கு உதவியாக அமைய வேண்டும்.

பல நல்லுள்ளம் படைத்தவர்கள் தங்களது பணங்களை இதற்காக செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் சுட்டிக்காட்டுகின்ற வேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணங்கள் சேகரிக்கப்படுவதிலும். அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதிலும் அநீதி ஏற்படாமலும், மோசடி இடம்பெறாமலும் இருப்பதும் அவசியமென்பது வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.

இறை கட்டளையின் பிரகாரமும், நபி காட்டிய வழி முறையிலும் ரமழான் கால நன்மைகளைச் செய்வதற்கும் தர்மங்களைப் புரிவதற்கும் ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றபோதுதான் அதன் முழுமையான பயனை அடைந்துகொள்ள முடியும். அந்தவகையில் இலட்சக்கணக்கில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை வேண்டி தங்களது கரங்களை விரித்துக் காத்திருக்கும் இத்தேசத்து மக்களுக்கு முடிந்தவரை நமது நேசக்கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீரைத்துடைக்க இந்த ரமழான் மாதத்தில் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதற்கு வல்ல இறைவன் வாய்ப்பளிப்பானாக!
 
காத்திருக்கும் கரங்கள் காத்திருக்கும் கரங்கள் Reviewed by Madawala News on 6/01/2017 11:26:00 PM Rating: 5