Ad Space Available here

மருதானையில் பேர்கரி கோர்னர் முஸ்லிம் ஹோட்டலில் தீ ..


மருதானை மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் உரிமையாளருக்கு சொந்தமான த பேர்கரி கொர்னர் என்ற ஹோட்டல் மீது நள்ளிரவு – 12.30 மணியளவில் தீமூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டலின் பின்பகுதியினால் இந்த தீ வைப்பு  மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 07 நாட்களாக குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தாக தெரிவிக்கிப்படுகிறது.

ஹோட்டலில் பலத்த தீ வெளியானமையினால் சம்பவ இடத்திற்கு உடன் வருகை தந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் மேலதிக விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்..

மருதானையில் பேர்கரி கோர்னர் முஸ்லிம் ஹோட்டலில் தீ .. மருதானையில் பேர்கரி கோர்னர் முஸ்லிம் ஹோட்டலில் தீ .. Reviewed by Madawala News on 6/08/2017 02:18:00 AM Rating: 5