Kidny

Kidny

குவைத் இலங்கை தூதரகத்தின் மனிதநேய முன்மாதிரி.


இலங்கையிலிருந்து பலரும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக செல்வதுண்டு. வேலை வாய்ப்புகளுக்காக வெளினாடு செல்லும் சகோதரர்கள் சில வேலை அங்கு மரணித்து விடுகிறார்கள். 

வெளிநாட்டில் மரணித்தவர்களின் ஜனஸாக்களை இலங்கை கொண்டு வருவதில் பலரும் பல விதங்களில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். 

அந்த வகையில் குவைத்திலிருக்கும் இலங்கைக்கான தூதரகம் ஜனாஸாக்களை அனுப்பி வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது வரவேற்க்கத் தக்கதாகும். 

கடந்த வாரமும் இலங்கை ஓட்டமாவடி பகுதியில் மரணித்த ஒரு சகோதரரின் ஜனாஸாவை இலங்கை அனுப்பி வைப்பதற்க்கு முனைந்த குவைத் SLTJ / TNTJ சகோதரர்களுக்கு முழுமையான சட்ட ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கி குறித்த ஜனாஸாவை உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவைக்கும் மனிதநேய பணியில் முழு மூச்சாக ஈடுபட்டார்கள். 

குவைத் - இலங்கைக்கான தூதரகத்தின் பெருமதிமிக்க மனித நேயப் பணிக்கு இந்த நேரத்தில் எமது பூரண நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

-SLTJ குவைத் கூட்டமைப்பு

குவைத் இலங்கை தூதரகத்தின் மனிதநேய முன்மாதிரி. குவைத் இலங்கை தூதரகத்தின் மனிதநேய முன்மாதிரி. Reviewed by Madawala News on 6/09/2017 05:14:00 PM Rating: 5