Ad Space avaiable

பொறுமை காத்த முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு ..


ரமழான் மாதத்தின் உண்­மை­யான அர்த்தத்தை வெளிப்­ப­டுத்தும் வகை யில் தம் மீதான வன்­மு­றை­களின் போது முஸ்லிம் மக்கள் பொறுமை காத்­த­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நன்றி தெரிவித்தார்.


பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­ல­மான அலரி மாளி­கையில் நேற்று இடம்­பெற்ற இப்தார் தின நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ரமழான் மாதத்தை நாம் பக்தி, பொறுமை மற்றும் கரு­ணை­யுடன் கடக்­கின்றோம். குறிப்­பாக தற்­போ­தைய ரமழான் காலத்தில் தம்மை ஏசி­னாலும் தம்­மீது தாக்­குதல் நடத்­தி­னாலும் முஸ்லிம் மக்­களின் பொறு­மைக்காக நான் நன்றி கூறு­கின்றேன்.


விசே­ட­மாக ரமழான் பண்­டி­கையின் உண்­மை­யான அர்த்தம் இதனால் வெளிப்­ப­டு­கின்­றது. அத்­துடன் நாட்டில் ஏற்­பட்ட அனர்த்­தத்தின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இஸ்­லா­மி­யர்கள் தமது பண்­டி­கை­யி­னையும் கொண்­டா­டாமல் பணத்தை வழங்­கி­வைத்­தார்கள்.


இலங்­கை­யர்­க­ளுக்­கா­கவே அந்தப் பணத்தை வழங்­கி­னார்கள். பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­களில் அதி­க­மாக சிங்­கள மக்­களே வசித்­தார்கள். எனவே அதற்கும் இங்கு நான் நன்றி கூற வேண்டும். இவ்­வா­றி­ருக்­கின்ற போது ஒரு மதம் உரு­வா­கி­யுள்­ளதை அந்த மதத்­தைப் பின்­பற்­று­வர்கள் மட்­டு­மன்றி அதன் தோற்­றத்தை நம்­பு­கின்­ற­வர்­களும் ஏற்­றுக்­கொள்­வார்கள். அதனால் மதம் என்­பது நல்­லி­ணக்­கத்தின் ஒரு பகு­தி­யா­கின்­றது.

நாம் இஸ்லாம் மற்றும் புத்த தர்­மத்தால் மனி­தர்­களின் மனங்­களை சுகப்­ப­டுத்­தவே முனை­கின்றோம். அதனால் உலக மக்களை சுகப்­ப­டுத்­தவும் எதிர்­பார்­க்கின்றோம். அத­னையே நபிகள் மற்­று­மொ­ரு­வரை மன­த­ள­விலும் உடல் ரீதி­யிலும் துன்­பு­றுத்­தாமல் இருக்­கின்­ற­வ­ரையே அல்லாஹ் ஏற்­றுக்­கொள்வார் என்று கூறி­யுள்ளார். 


அதேபோல் புத்த மதத்­திலும்  மற்­ற­வ­ருக்கு நெருக்­கடி கொடுக்­கா­மலும் உயிரை பறிக்­கா­மலும் இருக்க வேண்டும் என்ற போதனைகள் உள்­ளன. அதனால் நாங்கள் எல்லா மதத்­தையும் மதிக்­கின்றோம்.


இஸ்­லாமில் ஒரு கூற்று உள்­ளது. (உங்கள் மதம் உங்­க­ளுக்கு. எமது மதம் எமக்கு என்பர்) அதற்­க­மை­யவே இன்று நாங்கள் செயற்­ப­டு­கின்றோம். அத­னையே அசோக மன்­னனும் நாம் சகல மதங்­க­ளையும் மதிக்க வேண்டும் என்று கூறி­யுள்ளார்.


அதனால் மனதில் குரோ­தங்­களை கொண் ­ட­வர்கள் புத்த மதத்தின் போர்வையில் மறைந்து பாது­காப்பு பெற முடி­யாது. அவ்­வா­றா­னவர்­க­ளுக்கு பாது­காப்புக் கொடுக்க வும் முடி­யாது. இன்று சகல மக்­களும் இணைந்து சக­வாழ்வை உரு­வாக்க  முனை­கின்­றார்கள்.  

அதற்­கா­கவே சட்­டத்தின் ஆட்­சியை வலுப்­ப­டுத்­து­கின்றோம். அதனால் எந்த ஒரு நபரும் சட்­டத்­திற்கு அப்பால் சென்று செயற்­பட முடி­யாது. எனவே சகலரும் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டியது அவசியமாகும். இன்று நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றார்கள்.


எனவே முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் சமாதானத்தை உண்டுபண்ண மேற் கொண்ட முனைப்புக்களுக்கும் நன்றி கூற வேண்டும் என்றார்.

நன்றி - கேசரி..


பொறுமை காத்த முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு .. பொறுமை காத்த முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு .. Reviewed by Madawala News on 6/23/2017 04:41:00 PM Rating: 5